"இவங்க" ஏன் டென்ஷன் ஆகறாங்க.. எல்லாரும் பார்த்துட்டு இருக்காங்க.. டிடிவி தினகரன் போட்ட போடு!
தமிழக அமைச்சர்களை விமர்சித்து தினகரன் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "சின்னம்மாவை வரவேற்க எல்லாரும் மகிழ்ச்சியோடு இருக்கும் நிலையில், ஒரு சில அமைச்சர்கள் மட்டும் பதற்றம் அடைவது ஏன்?" என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். "இவர்களே எதையாவது செய்துவிட்டு,அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது" என்றும் தினகரன் தன்னுடைய ஐயத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
சசிகலா டிஸ்சார்ஜ் ஆகி காரில் ஏறி ரிசார்ட்டுக்கு செல்லும்போதே, காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.. இந்த கொடியை சசிகலா பயன்படுத்துவதில் பலவித மாறுபட்ட கருத்துக்கள் எழுந்தபடியே உள்ளன.. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டப்படி தவறு என்று சிவி சண்முகம் முதல் ஜெயக்குமார் வரை கொந்தளித்தனர்.
அதேசமயம், "அது என்ன தேசிய கொடியா? யார் வேண்டுமானாலும் அதிமுக கொடியை காரில் கட்டலாமே? எத்தனையோ பேர் காரில் கட்டிக் கொண்டு போகிறார்களே? சசிகலாவுக்கு அதிமுக கொடியை பயன்படுத்த முழு உரிமை இருக்கிறது.. சட்டப்படியும் இருக்கிறது என்ற மாறுபட்ட கருத்துக்களும் எழுந்து வருகின்றன.

அதிமுக கொடி
கொடியை சசிகலா பயன்படுத்தியதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்த அடுத்த நிமிடமே, தினகரன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. "சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் என்பதால் கொடியை பயன்படுத்தும் அனைத்து உரிமையும் அவருக்கு இருக்கிறது" என்றார்.. இதற்கு பிறகு அதிமுகவில் எந்தவித எதிர்ப்பும் பெரிதாக அன்றைய தினம் எழவில்லை. ஆனால், தினகரனின் விளக்கத்தை ஏற்க மறுத்த அமைச்சர்கள், டிஜிபி திரிபாதியை 2 முறை நேரில் சந்தித்து மனு அளித்திருக்கின்றனர்.

சந்தேகம்
இதையும் அரசியல் நோக்கர்கள் தவறு என்றே நம்மிடம் பேசும்போது சொன்னார்கள்.. "இந்த விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சனை.. கட்சி கொடி விவகாரம் சிவில் சம்பந்தப்பட்டது.. ஏன் போலீசுக்கு போகணும்? இது என்ன கிரைம் விவகாரமா? நேராக கோர்ட்டுக்கு போய், கொடியை பயன்படுத்துவது சம்பந்தமாக ஸ்டே வாங்கியிருக்க வேண்டியதுதானே? சட்டம் தெரிந்து அனுபவம் வாய்ந்த சிவி சண்முகமே இதை செய்வது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்கள்.

பேட்டி
இதனிடையே, சிவி சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, டிடிவி தினகரன் செயல்படுகின்றனர்... சசிகலா சென்னை வரும்போது ஒருமிகப்பெரிய கலவரத்தை தூண்டி, அதன்மூலம் அதிமுக மீது பழியை போட முயற்சிக்கின்றனர் என்றார். சிவி சண்முகத்தின் இந்த பேட்டிக்குதான் பதிலடி தரும்வகையில், மொத்தம் 5 ட்வீட்களை டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.. இப்படி 5 ட்வீட்கள் இதுவரை அவர் மொத்தமாக பதிவிட்டதே இல்லை.. அவை இவைகள்தான்:

அமைச்சர்
"தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து, நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்கள்.
|
சந்தேகம்
அதிகாரத்திலுள்ள இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும்,டி.ஜி.பி.யிடம் மீண்டும் மீண்டும் தரும் பொய் புகார்களையும் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு,அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

பதிவு
மேலும், அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தின் மீதான உரிமை தொடர்பாக சின்னம்மா அவர்களால் தொடரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை, வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசி வருகிறார்கள். இவர்களின் பேச்சையெல்லாம் மக்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களும் முகம் சுழித்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அமமுக களமிறங்கும் 11 தொகுதிகள் இதுதான்.. கேஎன் நேரு உள்பட 3 அமைச்சர்கள் + சீமானை எதிர்த்து போட்டி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!











Click it and Unblock the Notifications