எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியது ஏன்.. வருந்தி காரணத்தை கூறிய சசிகலா.. வைரலாகும் ஆடியோ
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியது ஏன் என்பது குறித்து சசிகலா கூறிய ஆடியோவில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அதிமுகவில் பல அதிர்வுகளை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் அவர் அண்மைக்காலமாக தொண்டர்களிடம் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. இவர் பெரும்பாலும் அதிமுக தொண்டர்களுடன் பேசி வருகிறார்.

தருமபுரி
இவர் பேசுவதை பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமி உள்பட கொங்கு மண்டல நிர்வாகிகளுக்கு செக் வைப்பது போல் தெரிகிறது. அந்த வகையில் அவர் பேசிய ஆடியோ ஒன்று இன்று வைரலாகி வருகிறது. இதில் தருமபுரி அதிமுக தொண்டர் பாலுவுடன் சசிகலா பேசினார்.

ஜெயலலிதா
அந்த ஆடியோவில் ஜெயலலிதா இருந்த போது தொடர்ந்து இரு முறை ஆட்சி அமைத்த நிலையில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. இதனால் எனது தந்தை, மாமனார் ஆகியோர் கடும் விரக்தியில் உள்ளனர் என பாலு தெரிவித்திருந்தார்.

எம்ஜிஆர்
இதற்கு பதிலளித்த சசிகலா கூறுகையில் எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி அதிமுக மீது கொங்கு மண்டல மக்களுக்கு அன்பும் பாசமும் அதிகம். அவர்களுடைய பிரதிநிதியான கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனச்சாமியை முதல்வராக்கினால் அந்த மண்டலத்தின் ஒட்டுமொத்த வாக்குகளும் அதிமுகவுக்கு கிடைக்கும்.

முதல்வாக்கியதால் வருந்தும் சசி
இதனால்தான் எடப்பாடி பழனிச்சாமியை நான் முதல்வராக்கினேன். மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை. தற்போது எடப்பாடி பழனிச்சாமியை ஏன் முதல்வராக்கினோம் என வருந்துகிறேன். உங்கள் தந்தை, மாமனாரிடம் சொல்லுங்கள், நான் விரைவில் வந்து கட்சியை சரி செய்கிறேன் என்றார் சசிகலா.












Click it and Unblock the Notifications