புண்பட்ட மனசு.. ஒரே கொடியை வைத்து.. தினகரனை திணறடித்த "உமா".. எல்லாத்துக்கு பின்னாடி சசிகலாவாமே!
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலா இடையிலான உறவு சுமுகமாக இல்லை என்றே கடந்த சில வாரங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதிலும் நடராஜன் நினைவு தினத்தின் போது கூட சசிகலாவை சந்திப்பதை தினகரன் தவிர்த்து.
நடராஜன் நினைவிடத்திற்கு சசிகலா வந்துவிட்டு சென்ற பின் சில நிமிடங்கள் கழித்துதான் தினகரன் வந்தார். அப்போதே இந்த மோதல் குறித்து பெரிதாக பேசப்பட்டது.

வெளியேற்றம்
இந்த நிலையில்தான் அமமுக கட்சியில் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்த உமாதேவன் கட்சியில் இருந்து வெளியேறியதற்கு பின் சசிகலா முக்கிய காரணமாக செல்லப்படுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை நிலையச் செயலாளரும் மண்டல பொறுப்பாளர்களில் ஒருவருமாக வலம் வந்தவர் உமாதேவன். முன்னாள் அதிமுக எம்எல்ஏவான உமாதேவன் அமமுகவில் முக்கியமான பொறுப்பை வகித்து வந்தார்.

என்ன காரணம் சொன்னார்
தினகரனுக்கு நெருக்கமாக கருதப்பட்ட இவர் நேற்று அமமுகவில் இருந்து வெளியேறினார். இதற்கு அவர் சொல்லி இருக்கும் காரணம்.. அதிமுகவை மீட்க வேண்டும் என்றுதான் அமமுகவை தினகரன் உருவாக்கினார். ஆனால் அதிமுகவை மீட்காமல் அமமுகவை வளர்பதிலேயே அவர் குறியாக இருக்கிறார். எனக்கு மனம் புண்பட்டு இருக்கிறது. அதனால் கட்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்று கூறி உமாதேவன் வெளியேறி இருக்கிறார். இதனால் தினகரன் தர்பாபு மேலும் வலுவிழந்து உள்ளது.

மோதல் காரணம்
இவர்கள் இடையிலான மோதலுக்கு சசிகலாவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த வருடம் சசிகாலா பசும்பொன்னுக்கு பயணம் சென்ற போது அவருடன் உமாதேவன் சென்றதாக கூறப்படுகிறது. சசிகலா தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று முன்னிறுத்தி வந்ததால் அவர் அதிமுக கொடி தாங்கிய வண்டியில் வந்தார். அதை காரணமாக வைத்து உமாதேவனும் அதிமுக கொடி கட்டிய வண்டியில் வந்தார். தன்னுடைய வண்டியில் இருந்த அமமுக கொடியை இவர் நீக்கிவிட்டார்.

சசிகலா உத்தரவு
இப்படி செய்யும்படி சசிகலாதான் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. நான் அதிமுக பொதுச்செயலாளர்.. நீ அதிமுக உறுப்பினர்தான் என்று கூறி உமாதேவனை சசிகலா கொடி கட்ட வைத்ததாக கூறப்படுகிறது. இப்படி அமமுக கொடியை உமா நீக்கியதுதான் அவருக்கும் தினகரனுக்கும் இடையிலான மோதலுக்கு காரணம் என்கிறார்கள். இந்த கொடி பிரச்சனை அப்போதே வெடித்த நிலையில் இரண்டு தரப்பிற்கும் இடையில் இது கருத்து வேறுபாடாக மாறி உள்ளது.

கருத்து வேறுபாடு மோதல்
அதன்பின் உட்கட்சி ரீதியாக இவர்களுக்கு இடையில், விரிசல் அதிகரித்து இருக்கிறது. இதுவே பின்பு மோதலாக மாறி சில நாட்களுக்கு முன் வாக்குவாதம் ஆகி உள்ளது.இதையடுத்தே உமாதேவன் அமமுகவில் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா - தினகரன் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில்தான் உமாதேவன் இப்படி வெளியேறியது மோதலை பெரிதாக்கி உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications