"எல்லாத்தையும் சரி செய்துடலாம்".. சென்னை அதிமுக தொண்டருடன் சசிகலா பேசிய 4ஆவது ஆடியோ!
சென்னை: நான் நிச்சயம் வருவேன், கவலைப்படாமல் இருங்கள் என அதிமுக உறுப்பினருடன் சசிகலா பேசும் 4ஆவது ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஏற்கெனவே அவர் பேசிய 3 ஆடியோக்கள் வெளியாகியுள்ளது. பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை வந்தார்.
மேலும் அதிமுக துண்டை கழுத்தில் அணிந்து கொண்டு ராமாவரத்தில் எம்ஜிஆர் தோட்டத்தில் திறக்கப்படாமல் இருந்த சிலையை திறந்து வைத்தார்.

அரசியல்
இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு நான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார். சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. கட்சிக்குள் இரு தலைமையிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

3 ஆடியோ
இந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் சசிகலா பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அதில் தொண்டர் ஒருவரிடம் கவலைப்படாமல் இருங்கள், நான் விரைவில் வருவேன், எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என கூறியிருந்தார்.

சசிகலா குரல்தான்
இது சசிகலாவின் குரல்தான் என்றும் அவர் கட்சியினரிடம் பேசி வருகிறார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த நிலையில் 2ஆவது ஆடியோவும் வெளியானது. அதில் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். அவர்களுள் சண்டையிட்டு கொள்வது மனதில் வேதனை தருகிறது என கூறியிருந்தார்.

முக்கிய நிர்வாகிகள்
அது போல் நேற்று முன் தினம் வெளியான ஆடியோவில் எடப்பாடி பழனிச்சாமி செய்த தவறுக்கு நான் என்ன செய்ய முடியும் என ராசிபுரம் அமமுக தொண்டரிடம் பேசியிருந்தார். இவர் சில அதிமுகவினரிடம் பேசியதாகவும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் பேசப்பட்ட ஆடியோ ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

4ஆவது ஆடியோ
இந்த நிலையில் சசிகலா பேசிய 4ஆவது ஆடியோ வெளியானது. அதில் சென்னையை சேர்ந்த அதிமுக நிர்வாகி ராஜாரகுபதி என்பவருடன் சசிகலா பேசியிருக்கிறார். அவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதற்கான அதிமுக அடையாள அட்டையும் இடம்பெற்றுள்ளது.

எல்லாத்தையும் சரி செய்துடலாம்
அவரிடம் சசிகலா பேசுகையில் கவலைப்படாதீர், நான் நிச்சயம் வருவேன், எல்லாத்தையும் சரி செய்து விடலாம் என கூறியிருக்கிறார். சசிகலா பேசுவது அமமுகவினருடன்தான். அதிமுகவினர் ஒருவரும் அவரிடம் பேசவில்லை என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications