ராமாவரம் தோட்டத்தில் சசிகலாவின் காரை சிறைபிடித்த எம்ஜிஆர் பேரன்.. சமாதானம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்
சென்னை: சென்னை ராமாவரம் தோட்டத்தில் சசிகலாவின் காரை எம்ஜிஆரின் பேரன் சிறைப்பிடித்து வைத்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டாலும் தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்றே கூறிகொள்கிறார் சசிகலா. இவர் சிறையிலிருந்து விடுதலையாகி சென்னைக்கு வந்த போது ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு வந்தார்.
அதன் பிறகு எம்ஜிஆரின் பிறந்தநாள், நினைவு தினம், அதிமுக நிறுவன நாள் ஆகியவற்றின் போதெல்லாம் ராமாவரம் தோட்டத்திற்கும் காது கேளாதோர் பள்ளிக்கும் செல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அதிமுக பொன் விழா
இந்த நிலையில் கடந்த ஆண்டு அதிமுகவின் பொன் விழா ஆடையொட்டி எம்ஜிஆர் நினைவு இல்லத்திறகு சசிகலா சென்றிருந்தார். அங்கிருந்து எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவர் பேசுகையில், நீர் அடித்து நீர் விலகாது. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம் என கூறி ஓபிஎஸ்ஸுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் சூசகமான மெசேஜை அனுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி
ஆயினும் சசிகலாவை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் சேர்க்க ஒப்புக் கொள்ளவே இல்லை. இந்த நிலையில் அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமைக்கான போட்டியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இரட்டை தலைமைகளுக்கிடையே போட்டி நிலவியதால் அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

51 ஆவது நிறுவன நாள்
இந்த நிலையில் அதிமுகவின் 51 ஆவது நிறுவன நாள் விழா கொண்டாட்டத்திற்காக அவர் சென்னை ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் தோட்டத்திற்கு சென்றிருந்தார். அங்கு எம்ஜிஆர் சிலைக்கு தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து ஏழை எளிய மக்களுக்கு 2000 பேருக்கு பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

சசிகலா ஆதரவாளர்கள்
அப்போது எம்ஜிஆர் பேரன் ராமசந்திரன் தனக்கு சில பாக்கெட்டுகள் பிரியாணியை தர வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. அப்போது அவருக்கும் சசிகலா ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது. இதையடுத்து இரு தரப்பினரும் அங்கிருந்தோர் விலக்கி விட்டனர். இதனால் அந்த பிரச்சினை அப்படியே புகைந்து வந்தது.

எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளி
இந்த நிலையில் நேற்று முன் தினம் எம்ஜிஆர் காது கேளாதோர் வாய் பேச முடியாதோர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தீபாவளி பட்டாசும் இனிப்பும், புத்தாடைகளையும் வழங்க சசிகலா முடிவு செய்திருந்தார். இவற்றை வாங்கி தனது கார் ஓட்டுநரிடமும் பாதுகாவலர் ஒருவரிடமும் அந்த பள்ளியில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுமாறு தெரிவித்தார்.

தீபாவளி பரிசு
சசிகலாவின் உத்தரவின்பேரில் தீபாவளி பரிசை எடுத்துக் கொண்டு அவர்கள் இருவரும் அங்கு சென்றனர். இவர்கள் கொடுத்துவிட்டு காரில் புறப்பட்ட வந்த போது அந்த காரின் சாவியை எம்ஜிஆரின் பேரன் ராமசந்திரன் பறித்துக் கொண்டார். இதனால் திடுக்கிட்ட சசிகலாவின் டிரைவரும் பாதுகாவலரும் என்ன ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டனர்.

எம்ஜிஆர் பேரன்
அதற்கு ராமசந்திரன் நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள், யாரை கேட்டு வந்தீர்கள் என கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இந்த வாக்குவாதம் முற்றியதும் சசிகலாவின் கார் டிரைவரை ராமசந்திரன் சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து சசிகலாவின் கார் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம் குறித்து பெங்களூர் புகழேந்திக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் எம்ஜிஆர் பேரன் ராமசந்திரனிடம் "தம்பி என்னதான் இருந்தாலும் சின்னம்மாவின் காரை நீங்கள் இப்படி செய்யக் கூடாது. யாரோ செய்த தவறுக்கு எம்ஜிஆர் காலத்திலிருந்து இருக்கும் சின்னம்மாவை அவமானப்படுத்துவது சரியல்ல" என பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஓபிஎஸ் ஆதரவாளர் பேச்சுவார்த்தை
இறுதியாக இரவு 10 மணிக்கு மேல் கார் சாவியை டிரைவரிடம் ராமசந்திரன் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சசிகலா கடும் அதிர்ச்சி அடைந்தாராம். அதிமுகவில் இருப்போர் தன்னை ஏற்க மறுத்து பிரச்சினை செய்கிறார்கள் என்றால் எப்போதும் மரியாதையாக நடந்து கொள்ளும் எம்ஜிஆர் பேரனும் இப்படி நடந்து கொண்டதால் சசிகலா வேதனை அடைந்தாராம். மேலும் என்னவென ஆதரவாளர்களிடம் விசாரித்த போதுதான் அந்த பிரியாணி பாக்கெட் விிவகாரம் வெளியே வந்ததாம். இதையடுத்து சசிகலா தனது ஆதரவாளர்களை கடிந்து கொண்டாராம். "யாரிடம் எப்படி நடந்து கொள்வது என்று கூடவா உங்களுக்கு தெரியாது" ராமசந்திரன் கேட்டதை கொடுத்திருக்க வேண்டியதுதானே என கடிந்து கொண்டாராம்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!











Click it and Unblock the Notifications