சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவை ஜூனியர்னு அழைத்த மாஜி அமைச்சர்கள்.. வளர்ச்சியை பிடிக்காத கட்சி நிர்வாகிகள்.. சசிகலா

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவிடமிருந்து என்னை பிரிக்க நிறைய அழுத்தம் கொடுக்கப்பட்டது என சசிகலா தெரிவித்தார்.

இதுகுறித்து சசிகலா தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், மதுரையில் மன்ற மாநாடு நடந்தது. அப்போது ஜெயலலிதா என்னையும் அந்த மாநாட்டுக்கு வருமாறு அழைத்தார். நான் வரவில்லை.

எனது கணவர் அரசு அதிகாரி என்பதால் நான் கட்சி சார்ந்த பணிகளுக்கு வரக் கூடாது என போனில் தெரிவித்தேன். அப்போது ஜெயலலிதா, அதெல்லாம் இல்லையே நீயும் வா என்றார்.

எம்ஜிஆர் மறைவு.. ஜெ.வுக்கு 2 நாட்களாக பச்ச தண்ணீர் கூட பல்லில் படலை.. சசிகலா சொன்ன வெளிவராத தகவல் எம்ஜிஆர் மறைவு.. ஜெ.வுக்கு 2 நாட்களாக பச்ச தண்ணீர் கூட பல்லில் படலை.. சசிகலா சொன்ன வெளிவராத தகவல்

5 ஆவது நிமிடத்தில்

5 ஆவது நிமிடத்தில்

உடனே இல்லை அக்கா நீங்கள் போய்ட்டு வாருங்கள் என்றேன். அடுத்த 5ஆவது நிமிடத்தில் எம்ஜிஆர் எனக்கு போன் செய்தார். உடனே மன்ற மாநாட்டுக்கு வா என அழைத்தார். நானும் அந்த மன்ற மாநாட்டுக்கு சென்றேன். அதற்கு அடுத்த நாள் எனது கணவர் நடராஜனை இலாகா அமைச்சர் புதுக்கோட்டைக்கு பணியிடமாற்றம் செய்தார்.

கணக்கு

கணக்கு

இவ்வாறு செய்தால் நாங்கள் குடும்பத்தோடு இடமாறுவோம் என சிலர் கணக்கு போட்டனர். ஆனால் எனது கணவரோ என்னை சென்னையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். எனது கணவர் பணிமாறுதல் விஷயத்தை நான் ஜெயலலிதாவிடம் சொல்லவே இல்லை.

கணவரை சாப்பிட

கணவரை சாப்பிட

6 மாதங்கள் ஆனது. ஒரு நாள் என்னையும் எனது கணவரையும் வீட்டிற்கு சாப்பிட அழைத்தார். அப்போது நான் மட்டும் சாப்பிட செனறதால் என் கணவர் எங்கே என கேட்ட போது நான் ஜெயலலிதாவிடம் மாட்டிக் கொண்டேன். உடனே எம்ஜிஆருக்கு ஜெயலலிதா போன் செய்தார்.

இடமாற்றம்

இடமாற்றம்

அப்போது நடராஜனை இடமாற்றம் செய்துவிட்டார்களாம். இதை இந்த பொண்ணு (சசிகலா) 6 மாதமாக என்னிடம் சொல்லவே இல்லை என்றார். அடுத்த நாள் காலையில் எனது கணவருக்கு சென்னைக்கு இடமாற்றம் கிடைத்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு அரசியல் வியூகங்களை வகுத்து கொடுத்தவர் என் கணவர்தான்.

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

கட்சியில் நிறைய இக்கட்டுகளை ஜெயலலிதா சந்தித்துள்ளார்கள். எம்ஜிஆர் முன்னிலையில் ஜெயலலிதாவை யாரும் எந்த தொந்தரவும் கொடுக்கமாட்டார்கள். அவர் இல்லாத போது மறைமுகமாக தொல்லைகளை கொடுத்தனர். அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்ற போது இந்த தொல்லைகள் அதிகமாகிவிட்டது.

ஏற்காத அமைச்சர்கள்

ஏற்காத அமைச்சர்கள்

மூத்த நிர்வாகிகளால் ஜெயலலிதாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்தது நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை. இன்னொன்று ஜெயலலிதாவை ஜூனியர் என சொல்வார்கள். ஜெயலலிதாவை இவர்கள் அவமானப்படுத்துவதால் அவர் அரசியலே எனக்கு வேண்டாம். எம்ஜிஆருக்கு உதவத்தான் வந்தேன். போதும் என்பார். ஆனால் நாங்கள் அவரை சமாதானம் செய்வோம் என்றார் சசிகலா.

English summary
V.K.Sasikala says that most of the AIADMK activists not like Jayalalitha's growth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X