அப்பல்லோவில் கண்ணாடி வழியாக பார்த்த எனது குடும்பம்.. ஜெயலலிதா செய்தது என்ன?.. சசிகலா பரபரப்பு
சென்னை: அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை எனது குடும்பத்தினர் கண்ணாடி வழியாக பார்த்தனர். அவரும் அவர்களை பார்த்து தலையசைத்தார் என ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது: 1990 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு இறுதி வரையில் எனக்கும் அக்காவிற்கும் இடையே எந்த ஒரு பிரச்சினையும் இருந்ததில்லை. ஆனால் 2011 இறுதியில் ஜெயலலிதாவிடம் மறைந்த நடிகரும் பத்திரிகையாளருமான சோ என்னை பற்றி தவறாக கொடுத்த தகவல்கள் மற்றும் அவரது தூண்டுதலின்பேரில் செயல்பட்ட ஒரு சிலரின் நடவடிக்கையின் காரணமாக ஜெயலலிதா, சோவின் முன்னிலையில் என்னை அழைத்தார்.

முழுமை
அப்போது என்னிடம் "சோ சில தகவல்களை சொல்கிறார். அது பற்றி நான் முழுமையாக உனக்கு பிறகு சொல்கிறேன். அதுவரை நீ திநகர் வீட்டில் இரு" என்றார். ஜெயலலிதாவின் பேச்சுக்கு நான் எப்போதும் மறு பேச்சு பேசியது கிடையாது என்பதால் சரி என சொன்னேன். நான் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பாக போயஸ் தோட்டத்தில் உள்ளவர்களை அழைத்து ஜெயலலிதாவிற்கு தேவைகள் என்னென்ன என்பதையும் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் கூறிவிட்டு அங்கிருந்து வாகனத்தில் கிளம்பினேன். அப்போது ஜெயலலிதா வாசல் வரை வந்து கையசைத்து என்னை வழி அனுப்பினார்.

ஜெயலலிதாவும் சோவும்
அப்போது அங்கு பணியில் இருந்தவர்களுக்கு இந்த விவரம் தெரியும். எனது குடும்பத்தினர் பற்றி பல அவதூறான தகவல்களை ஜெயலலிதாவிடம் சோவும் அவருடன் தொடர்பிலிருந்த நபர்களும் கூறியதால் என் குடும்பத்தினர் சிலர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஆனால் சிறிது நாட்களுக்குள்ளாகவே ஜெயலலிதா என்னிடம் சகஜமாக தொலைபேசியில் பேசத் தொடங்கினார். நானும் திநகர் வீட்டிலிருந்தபடியே பெங்களூர் நீதிமன்றத்திற்கு தேவையான பதில்கள், வழக்கின் வாதத்திற்கு தேவையான தகவல்களை சேகரித்து வழக்கறிஞர்களுடன் சேர்ந்து பல கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வந்தேன்.

ஆரம்பத்தில்
2011 ஆரம்பம் மற்றும் இடைப்பட்ட காலத்தில் கழகத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்ட நபர்களை ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்கள். அவர்கள் எல்லாம் இந்த சமயத்தை பயன்படுத்தி எனக்கெதிராக பல பொய் செய்திகளை பரவலாக பரப்ப தொடங்கினார்கள். ஆனாலும் குறைந்த காலகட்டத்திலேயே அக்கா என் குடும்பத்தை பற்றி வந்த செய்திகளெல்லாம் பொய் என்பதை கண்டறிந்தார். "எனக்கு வந்ததெல்லாம் தவறான தகவல்கள், உடனே நீ போயஸ் தோட்டத்திற்கு வா" என தொலைபேசியில் ஜெயலலிதா என்னை அனைத்தார். மேலும் சசி குடும்பத்தினர் பற்றி வந்த செய்திகள் மற்றும் நீங்கள் தந்த தகவல்கள் எல்லாம் பொய். எனவே சசியை போயஸ் தோட்டத்திற்கு அழைக்க நான் முடிவு செய்துள்ளேன் என ஜெயலலிதா சோவிடம் தெரிவித்தார்.

30 ஆண்டுகள்
"30 ஆண்டுகளாக உங்களுடன் இருந்த சசிகலாவை நீங்கள் வெளியேற்றியது தவறு என்றும் நீங்கள் கட்சியிலிருந்து அவர்களை அவசரப்பட்டு நீக்கியதும் தவறு என்றும் வெளியில் பேசுவார்கள். ஆகவே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் உங்களுக்கு மன்னிப்பு கடிதங்கள் கொடுத்தது போல் கடிதங்களை எழுதி வாங்குங்கள். அதன்பிறகு சேர்த்துக் கொள்ளுங்கள்" என சோ, ஜெயலலிதாவிடம் சொன்னதாக அவரே என்னிடம் தொலைபேசியில் கூறினார். அதற்கு நான் "அக்கா எனக்கு உங்கள் மரியாதையே முக்கியம், நான் மன்னிப்பு கடிதம் கொடுக்க தயார். தயாரித்து தர சொல்லுங்கள்" என்றேன். அப்போது அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன்.

தவறு செய்யாத குடும்பத்தினர்
எந்த ஒரு தவறும் செய்யாத எனது குடும்பத்தார், பலரின் தூண்டுதலின் பேரால் வழக்குகளை சந்தித்து இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களை மீண்டும் சேர்த்து இதன் காரணத்தால் எதிர்காலத்தில் இன்னும் வேறு விதமான இன்னல்களை அவர்கள் சந்திக்க நேரலாம். அதனால் அவர்கள் விலகியே இருக்கட்டும். உங்களுக்காக நான் என்ன செய்யவும் தயார் என்றேன். ஜெயலலிதாவும் நான் சொன்னதை யோசித்திவிட்டு ஏற்றுக் கொண்டார். "கொஞ்ச நாள் ஆகட்டும் எல்லாம் சரியாகிவிடும் என்றார். சோ தயாரித்து கொடுத்த கடிதத்தை ஜெயலலிதா எனக்கு அனுப்ப நான் அப்படியே அதில் கையெழுத்து 28.3.12 அன்று கொடுத்தேன். அதன்படி அதே ஆண்டு அதே மாதம் 31 ஆம் தேதி கடிதத்தின் மூலமாக என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்தார்.

போயஸ் தோட்டத்தில் சசிகலா
இதையடுத்து போயஸ் தோட்டத்திற்கு திரும்ப வந்துவிட்டேன். எனக்கு அக்காவின் மரியாதையும் கவுரவமும்தான் முக்கியம். எல்லாமே அவர்மட்டும்தான். பிறகு சோ மற்றும் சிலரின் தூண்டுதலால் போடப்பட்ட பொய் வழக்குகளிலிருந்து என் குடும்பத்தார் மீண்டு வந்தனர். அக்கா அழைத்ததன் பேரில் போயஸ் தோட்டத்திற்கு வந்தனர். பின்னர் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாத போது அவரை என் குடும்பத்தினர் வந்து பார்த்தனர். அவர்கள் கண்ணாடி வழியாக பார்த்தார். ஒரு சில உறுப்பினர்கள் பார்த்ததை அக்காவும் பார்த்துவிட்டு கையசைத்தார். அப்பல்லோவில் மருத்துவராக பணியாற்றும் எனது தம்பி திவாகரனின் மகள் ராஜமாதங்கியிடம் ஜெயலலிதா நன்றாக பேசினார். இது அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்கு தெரியும். இவ்வாறு சசிகலா தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications