சிக்னல் கொடுத்துட்டாரே சசிகலா.. ஆயுத பூஜை வாழ்த்தில் “கீ வேர்டு” கவனிச்சீங்களா? ட்விஸ்ட் இருக்குமோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்து தெரிவித்து உள்ள சசிகலா, அதன் மூலம் ஒரு சிக்னலை கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. என்ன அது? விரிவாக பார்ப்போம்.

சசிகலா வெளியிட்டு இருக்கும் வாழ்த்து செய்தியில், "அன்னை அம்பிகையின் அருளைப் பெற்று, நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றியுடன் நிறைவேற்றிட அனைவராலும் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், பத்தாவது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் என் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Sasikala sending a signal by wishing Ayudha Puja and Vijayadashami

உயிருள்ள பொருட்கள், உயிரற்ற பொருட்கள் என அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறை பொருளாக பாவித்து வணங்குவதே ஆயுத பூஜை திருநாளாகும். அதேபோன்று, மகிஷாசுரன் என்னும் கொடிய அரக்கனை அன்னை பராசக்தி அழித்து வெற்றி வாகை சூடிய நாளினை விஜயதசமி திருநாளாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. மேலும், விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு, நற்காரியங்களைத் தொடங்கிடும் வெற்றித் திருநாளாகவும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும்; லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்; சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் நவராத்திரி பண்டிகையின் முதல் 3 நாட்களில் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்களில் லட்சுமி தேவியையும். சுடைசி 3 நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுகிறார்கள்.

இத்தகைய சிறப்பு மிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக இருந்து வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அதிமுக இரட்டைத் தலைமை பிரச்சனை பெரும்பாலும் ஒய்ந்து எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகிவிட்டார். ஆனாலும், சசிகலா, டிடிவி தினகரன் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என அதிமுக ஆதரவாளர்கள் பிரிந்து உள்ளார்கள். தேர்தல்களில் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் பாதிப்பு இதனால் ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்தில், "வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக இருந்து வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று.." என்று குறிப்பிட்டு அனைவரையும் ஓரணிக்கு அழைக்க சிக்னல் கொடுப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+