ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ பரிந்துரைத்தும்.. தடுத்த சசிகலா உட்பட 5 பேர்! ஆறுமுகசாமி ஆணையம் ரிப்போர்ட்
சென்னை: ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டும், அந்த சிகிச்சை மருத்துவமனை நிர்வாகத்தால் வழங்கப்படாத வகையில் சசிகலா உட்பட 5 பேர் சிறப்பாக திட்டமிட்டு செய்யப்பட்டனர் என்று ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவிற்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று இந்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் நிலவி வந்த நிலையில் பல அதிர்ச்சி அளிக்கும் விவரங்களை இந்த விசாரணை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

விசாரணை
இந்த அறிக்கையில், எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. முக்கியமான மருத்துவர்கள் வந்தும் ஜெயலலிதாவிற்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவரின் சிகிச்சையில் நிறைய தவறுகள் உள்ளன. சிகிச்சை மட்டுமின்றி சிகிச்சை தொடர்பான வெளியான விவரங்களில் நிறைய தவறுகள் உள்ளன.

முடிவு
சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக கருதப்பட வேண்டும். ஜெயலலிதாவின் தனி மருத்துவர் கே.எஸ்.சிவகுமார் முறையான தொடக்க சிகிச்சைகளை வழங்கவில்லை. அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார். இந்த சிகிச்சை செய்தால் ஜெயலலிதா உடல் நலம் மோசமாகி இருக்காது.

ஜெயலலிதா
ஆனால் அது நடக்கவில்லை. ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ அளிக்கப்படவில்லை. ஆஞ்சியோ அளிக்கப்பட்டதாக வெளியான செய்தியே தவறு. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவிடாமல் தடுத்து உள்ளனர்.அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரசல் பரிந்துரைத்தபடியும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்யப்படவில்லை. டாக்டர் சமின் ஷர்மாவை மறைந்த முதலமைச்சரை சந்திக்க அழைத்துச்சென்றபொது பரிசோதனைக்குப் பின்னர், மருத்துவ பதிவுகளைப் பார்த்து "அவரே கொரோனரி ஆஞ்சியோகிராம் செய்யவும், அச்சிகிச்சை செய்ய தயாராகவும் இருந்தார், ஆனால் மருத்துவமனை நடவடிக்கை எடுக்கவுமில்லை, அறுவை அனுமதிக்கவுமில்லை" கூறினார்.

உறவு
மறைந்த முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடனேயே டாக்டர்.சோமன் அறிவுறுத்திய பிறகும், அவர்கள் ஆஞ்சியோ செய்யவில்லை. இதை பற்றி கேட்டபோது, அவர் ஒரு தீவிரசிகிச்சை மருத்துவர் மட்டுமே; அதனால் அவருக்கு அது குறித்து எக்கவலையும் இல்லை என்றும், இதனா; ஆஞ்சியோ ஒத்திவைக்கப்பட்டது என்றும், அதற்கு எந்த விளக்கமும் இல்லை என்றும் சாதாரணமாகக் கூறுகிறார். அவரின் உயிரை காக்க வேண்டிய முக்கியமான அறுவை சிகிச்சையை அவர்கள் செய்யாமல் தடுக்கப்பட்டு உள்ளனர் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சசிகலா
மேலும் சசிகலா மீதும் இதில் நேரடியாக 426 பக்கத்தில் குற்றஞ்சாட்டி உள்ளனர். அதில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தும், மறைந்த முதல்வரை சிகிச்சைக்காக வெளிநாட்டினரை அழைத்துச்செல்வதற்குத் தேவையான, முறையான முயற்சியை எடுக்காதது வியக்கத்தக்கது. C.W.146 - சுகாதாரத் துறை அமைச்சர் ஒரு தகுதிவாய்ந்த மருத்துவராக இருந்தாலும்,நோயாளியின் மருத்துவ நிலை மருத்துவ விதிமுறைகள், கருதப்பட்ட மற்றும் செய்யப்பட்ட நடைமுறைகள் போன்றவற்றை நன்கு புரிந்துகொள்வதில் திறமையானவராக இருந்தபோதிலும், வெளிநாட்டில் சிகிச்சை பெறுவது தொடர்பாக டாக்டர் ரிச்சர்ட் பீலேயின் உயிர்காக்கும் ஆலோசனைகள் குறித்தும் டாக்டர்.ஸ்டூவர்ட் ரஸ்ஸல், டாக்டர்.சமின் சர்மா, டாக்டர்.ராஜீவ் சோமன்
மற்றும் C.W.120-டாக்டர்.ராம் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கண்ணுக்குத் தெரியாத குறைபாடுகளைக் கண்டறிவதற்கு மட்டுமல்லாமல் அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்கவும் ஆஞ்சியோகிராம் செய்வதன் தேவை, பாதுகாப்பு, முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் தொடர்பான ஆலோசனைகள் குறித்தும் அவர் ஏன் தனது மனதையும் அறிவையும் பயன்படுத்தவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

சசிகலா குற்றச்சாட்டு
மேலும் ஆச்சரியம் என்னவெனில், சாட்சிப் பெட்டியில், சிகிச்சை தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக கேட்கப்பட்ட கேள்விக்கு. அவர் தகவல் கிடைக்கப்பெறவில்லை அல்லது நினைவில்லை என்று கூறியபோதிலும், அப்பல்லோ மருத்துவர்கள் சிறந்த சிகிச்சையை வழங்கினார்கள் என்று ஆணித்தரமாகக் கூறினார். சுருக்கமாக, உறவினர்களற்ற மறைந்த முதல்வரை அவரது இறுதி நாள்வரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை முறியடித்து அப்பல்லோ மருத்துவமனையிலேயே வைப்பதற்காக, சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்ட முக்கிய கருவியாக திகழ்ந்தார். அப்பல்லோ சிகிச்சையில் ஆஞ்சியோ செய்வதை தவிர்த்து R.1 சசிகலா,C.W.99 டாக்டர்.Y.V.C. ரெட்டி, C.W.106 - டாக்டர் பாபு ஆபிரகாம். C.W.136 - சுகாதாரத்துறைச் செயலாளர் மற்றும் C.W.146
சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரால் நன்கு திட்டமிடப்பட்டு, இறுதி வரை சரியாகச் செயல்படுத்தப்பட்டது என்றால் அது மிகையாகாது, என்று குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications