அன்னிய செலாவணி மோசடி வழக்கு.. சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: அன்னிய செலாவணியில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் சசிகலா நேரில் ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதாவின் தோழியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருமான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் மீது வேறு சில வழக்குகளும் வெவ்வேறு நீதிமன்றங்களில் உள்ளன.
ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியதில் சசிகலா, பாஸ்கரன் இருவரும் அந்நிய செலாவணி மோசடி செய்ததாக இவர்கள் மீது அமலாக்கத்துறை ஐந்து வழக்குகளை பதிவு செய்தது.

வீடியோ கான்பிரன்சிங்
சசிகலா, பாஸ்கரன் ஆகியோருக்கு சேர்த்து 3 வழக்குகளும். இருவர் மீதும் தனி தனியாக 2 வழக்குகளும் தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் சசிகலா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆனார்.

வாக்குமூலம்
அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆனார். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு அவர் தனது வாக்குமூலத்தை ஆடியோ மூலம் பதிவு செய்தார்.

நேரில் ஆஜராக உத்தரவு
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வரும் 13 ஆம் தேதி சசிகலாவை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிபதி உத்தரவு
சசிகலா ஆஜராகும்போது சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் குறித்து விளக்கம் கேட்கவும் நீதிபதியின் கேள்விக்கு பதில் அளிக்கவும் சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி உத்தரவிட்டுள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications