சசிகலா சீரியஸாக பேசிக்கொண்டிருந்த போது வித்தியாசமாக ரியாக்சன் கொடுத்த பெண்.. அன்று vs இன்று
சென்னை: அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று சசிகலா பேசிக்கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் இருந்த பெண் கொடுத்த ரியாக்சன் மீம்ஸ் வீடியோவாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. சசிகலா பின்னால் நின்ற பெண், இரண்டு முறை பேட்டிகளின் போது கொடுத்த ரியாக்சன்களை தொகுத்து வீடியோ போட்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த அதிமுக, கடைசியாக நடந்த லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.. சில தொகுதிகளில் 3வது இடத்தை தான் பிடித்தது. இந்த சூழலில் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று புறக்கணித்துள்ளது.

தொடர்ந்து அதிமுக தோல்விகளை சந்தித்து வருவதால், பிரிந்து கிடந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் பலர் அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் அமைப்பினை ஆரம்பித்துள்ளனர். ஓ பன்னீர்செல்வமும் அதிமுகவில் பழையபடி ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளார்.
இந்நிலையில் சசிகலாவும் அதிமுகவை காப்பாற்ற களம் இறங்க போவதாக அறிவித்துள்ளார். அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசும் போது, "அதிமுக முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனெனில் என்னோட என்ட்ரி ஆரம்பித்துவிட்டது.
எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதாவும் நானும் பல இன்னல்களை சந்தித்து, மிகப்பெரிய இயக்கமாக அதிமுகவை கட்டமைத்துள்ளோம். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கி இருந்தோம். ஆனால் இன்று அதிமுக தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், ஒருசில சுயநலவாதிகள் கட்சியை இந்த அளவிற்கு எடுத்துச் சென்று இருக்கிறார்கள். இவை அனைத்தையும் நான் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
எனக்கென்று சொந்த ஊர், சொந்த சாதி எல்லாம் கிடையாது. அதிமுகவில் வாரிசு அரசியலும், சாதி அரசியலும் கிடையவே கிடையாது. ஆனால், அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் சாதி அரசியல் செய்து வருகிறார்கள். சாதி அரசியல் செய்வதை அதிமுகவில் தொண்டர்கள் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். என்னாலும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். நான் சாதி அரசியல் செய்திருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவி கொடுத்திருப்பேனா?
ஜெயலலிதாவுக்கு சசிகலா போல
— உண்மை கசக்கும் (@Unmai_Kasakkum) June 17, 2024
இந்தம்மாவுக்கு அந்தம்மா போல..
😂😂 pic.twitter.com/0S7pIBtrGe
அதிமுக 3வது மற்றும் 4வது இடத்துக்கு சென்றுவிட்டது. இதற்கெல்லாம் யாருங்க காரணம்.. அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கு. எனவே சிலர் தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்க வேண்டாம் என்பதே அனைவரின் எண்ணமாக இருக்கிறது. அதிமுக இத்துடன் முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது. என் பின்னால் தொண்டர்களும், மக்களும் இருக்காங்க...
இனி அதிமுக தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் சுற்றுப்பயணம் செய்ய போகிறேன்.. இன்று அதிமுக நான்காக பிரிந்து போயிருக்கலாம். ஆனால் எல்லோரும் நிச்சயம் ஒன்றாக சேருவார்கள். இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது இந்த நேரத்தில் சரியில்லை, மிகப்பெரிய தவறான முடிவு" இவ்வாறு சசிகலா சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் சசிகலா சீரியஸாக பேசிக்கொண்டிருந்த போது, அவர் பக்கத்தில் நின்றிருந்த பெண் ஒருவர், சசிகலாவின் ஒவ்வொரு பேச்சுக்கும் தலையை ஆட்டியபடி ரியாக்சன் கொடுத்துக் கொண்டிருந்தார். சசிகலாவின் பேட்டியை கவனித்தவர்கள் அந்த பேட்டியை ஜூம் செய்து பின்னால் நின்ற பெண்ணின் ரியாக்சனையும் கவனித்தார்கள். இது என்னப்பா இந்த பெண் இப்படி ரியாக்சன தருகிறாரே என்று அதை மீம்ஸ் ஆக்கினார்கள். இதனிடையே ஏற்கனவே அதே பெண், சசிகலா முன்பு பேசிய போது, இதேபோன்று ரியாக்சன் கொடுத்திந்தார். இரண்டையும் வீடியோவாக்கி பாட்டெல்லாம் போட்டு பரப்பி வருகிறார்கள். இதனால் சசிகலாவின் பேச்சு மீம்ஸ் வடிவில் வேகமாக பரவி வருகிறது.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications