சிறையிலிருந்து சசிகலா ஜனவரி 27ம் தேதி ரிலீஸ்.. ஹைகோர்ட்டில் தெரிவித்த வக்கீல்! அனல் பறக்கும் அரசியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து ஜனவரி 27ம் தேதி விடுதலையாக உள்ளதாக அவர் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஜனவரி 27... சசிகலா விடுதலை? பரபரக்கும் அரசியல் களம்..!

    சசிகலாவுக்கு எதிரான வருமானவரி வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    1994-95ம் ஆண்டு, சசிகலா தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கில் 4 லட்ச ரூபாய் குறைத்து காட்டியதாக மதிப்பீட்டு அதிகாரி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்த உத்தரவை வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்ததை எதிர்த்து வருமான வரித்துறை ஆணையர் கடந்த 2008ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

     சசிகலா வழக்கு

    சசிகலா வழக்கு

    இந்த வழக்கு விசாரணை இன்று வந்தபோது, இந்த வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்களை நீதிபதிகள் கேட்டிருந்தனர். அப்போது, சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு முக்கியமான தகவலை தெரிவித்தார். சசிகலா தரப்பு வக்கீல் கூறுகையில், ஜனவரி 27ஆம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா ரிலீஸ் செய்யப்படுவார். அவர் விடுதலையான பிறகு வழக்கு பற்றி அவரிடம் கூடுதல் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் பதில் அளிக்க விரும்புகிறோம்.

    ஜனவரி 27ம் தேதி ரிலீஸ்

    ஜனவரி 27ம் தேதி ரிலீஸ்

    எனவே நீங்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்செல்வி, பிப்ரவரி 4ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர். எனவே சசிகலா ஜனவரி 27ஆம் தேதி ரிலீஸ் செய்யப் படுவது உறுதியாகிவிட்டது என்று தெரிகிறது.

    சொத்துக் குவிப்பு

    சொத்துக் குவிப்பு

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி 4 பேரையும் குற்றவாளிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்தார்.

    சிறையில் சசிகலா

    சிறையில் சசிகலா

    இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி, ஜெயலலிதா மறைந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரை வழக்கில் இருந்து நீக்கிய உச்சநீதிமன்றம், மற்ற 3 பேருக்கும் குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல், பெங்களூர் நகரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலா இந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்படும் என்கிறார்கள். அடுத்தடுத்த மாற்றங்கள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+