சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல் தந்த உறுதி.. நாளை காங்கிரசில் சேரும் முன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில்.. செம்ம திருப்பம்

Google Oneindia Tamil News

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டு ராவ் முன்னிலையில் நாளை சென்னையில் காங்கிரஸில் இணைகிறார்

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6மாதங்களே உள்ள நிலையில், முன்னாள் கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரியான .சசிகாந்த் செந்திலை (41 வயது) காங்கிரஸ் கட்சி வளைத்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் கர்நாடகாவில் துணை ஆணையராக இருந்த சசிகாந்த் செந்தில். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்து விலகினார். முன்னாள் ஐஏஏஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் நாளை சென்னை சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைலையில் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.

சட்டமன்றத் தேர்தல் முடியட்டும்... வட்டியும் முதலுமாக வச்சுக்கறேன்... மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!சட்டமன்றத் தேர்தல் முடியட்டும்... வட்டியும் முதலுமாக வச்சுக்கறேன்... மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

பாஜகவின் கொள்கைகள்

பாஜகவின் கொள்கைகள்

இது தொடர்பாக தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், சமூகங்களிடையே ஏற்பட்ட மோதல்கள், மத ரீதியான வன்முறைகள் மற்றும் பாஜகவின் கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக சசிகாந்த் செந்தில் தீவிரமாக இருக்கிறார். நாட்டை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் சேர விரும்புகிறார். அவர் ஏற்கனவே தனது கருத்துக்களை ராகுல் காந்தியுடன் விவாதித்துள்ளார். காங்கிரஸ் கட்சி அவரை தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்ளும் " என்றார்.

நாளை இணைகிறார்

நாளை இணைகிறார்

கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ்ஸில் 10 ஆண்டுகள் பணியாற்றிய சசிகாந்த் செந்தில், தினேஷ் குண்டுராவ் மற்றும் தமிழக காங்கிரஸ கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் நாளை சேரவுள்ளார். இது தொடர்பாக சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், என் போராட்டத்தைத் தொடரும் முயற்சியாக காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ள அனைத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். நான் எங்கிருந்தாலும், என் கடைசி மூச்சு வரை அப்படியே தொடருவேன், என் வாழ்நாள் முழுவதும் குறைந்த சலுகை பெற்றவர்களுக்காக நான் ஒரு குரலாக இருக்க முயற்சிக்கிறேன். " என்று கூறியுள்ளார்.

முதல் சட்டசபை தேர்தல்

முதல் சட்டசபை தேர்தல்

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் அதிரடியாக சசிகாந்த் செந்தில் அரசியலில் நுழைந்துள்ளார். குறிப்பாக அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது திமுக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஜெயலலிதா இல்லாமலும், திமுக கருணாநிதி இல்லாமலும் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் வரப்போகும் சட்டசபை தேர்தல் ஆகும்.

ஐஏஎஸ் ஐபிஎஸ்

ஐஏஎஸ் ஐபிஎஸ்

பாஜக அண்மையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை இணைத்து மாநில துணை தலைவர் பதவி அளித்து கௌரவித்தது. அதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சி முன்னாள் ஐஏஏஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலை தங்கள் கட்சியில் நாளை இணைக்க போகிறது. சசிகாந்த் செந்திலுக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Sasikanth Senthil, who served for 10 years in the IAS in Karnataka, will join the congress party in the presence of Rao and state Congress president KS Alagiri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X