சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவிற்கு தேவை 6.. அதிமுகவிற்கு தேவையோ 66.. தமிழக தலைவிதியை நிர்ணயிக்கும் 70.. பரபர "நம்பர் கேம்"!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகள்தான் தேர்தல் முடிவை மாற்றும் என்று சத்தியம் டிவியின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.. இந்த 70 தொகுதிகள் யார் பக்கம் செல்கிறதோ அவர்களே வெற்றிபெறுவார்கள் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் நிறைய வெளியாகி வருகின்றன. தமிழக தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பை நேற்று சத்தியம் டிவி வெளியிட்டது. தமிழகம் முழுக்க அனைத்து தொகுதிகளிலும் சர்வே செய்யப்பட்டு கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பின்படி ஒரு தொகுதியில் முதலில் வரும் கட்சிக்கும், இரண்டாவது வரும் கட்சிக்கும் இடையில் 3% வாக்குகள் வித்தியாசம் இருந்தால் அது இழுபறி உள்ள தொகுதியாக கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

தமிழக சட்டசபை தேர்தல் சத்தியம் கருத்து கணிப்பின்படி திமுக மொத்தம் 112 இடங்களில் வெல்லும், அதிமுக 52 இடங்களில் வெற்றிபெறும். ஆனால் 70 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும். இந்த 70 தொகுதிகள்தான் தேர்தல் முடிவை தீர்மானிக்க போகிறது. இங்கு வெல்லும் கட்சியே தேர்தலில் வெல்லும்.

திமுக

திமுக

இந்த கருத்து கணிப்பின்படி திமுக மெஜாரிட்டி பெற இன்னும் 6 இடங்கள் இருந்தாலே போதும். அதே சமயம் அதிமுக மெஜாரிட்டி பெற 66 இடங்கள் தேவை. அதாவது இழுபறியாக இருக்கும் 70 தொகுதிகளில் 6 தொகுதிகளை வென்றால் திமுக வென்றுவிடும். ஆனால் அதிமுக 66 தொகுதிகளை வென்றால் மட்டுமே மெஜாரிட்டி பெற முடியும்.

சாதகம்

சாதகம்

இன்னொரு பக்கம் 70 இழுபறி தொகுதிகளில் 38 திமுக சாதகமாக உள்ளது, 29 அதிமுக சாதகமாக உள்ளது என்று சத்தியம் தொலைக்காட்சி கூறியுள்ளது. அதாவது 38 தொகுதிகளில் இழுபறி நீடித்தாலும் அங்கு திமுகவே முன்னிலையில் உள்ளது. 3%க்கும் குறைவான வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அதிமுகவோ 29 தொகுதிகளில் 3%க்கும் குறைவான வாக்குகளோடு முன்னிலையில் உள்ளது.

மண்டல வாரியாக

மண்டல வாரியாக

மண்டல வாரியாக இழுபறி நிலவரம் இதோ,

  • தெற்கு மண்டலத்தில் 18 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும்.
  • கொங்கு மண்டலத்தில் 17 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும்.
  • டெல்டா மண்டலத்தில் 7 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும்.
  • வடக்கு மண்டலத்தில் 22 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும்.
  • சென்னை மண்டலத்தில் 6 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
எப்படி

எப்படி

மொத்தமாக இந்த 70 தொகுதிகளில் வெறும் 3% வேறுபாடு மட்டுமே இருப்பதால் தேர்தல் முடிவுகள் எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. திமுகதான் வெல்லும், அதிமுகதான் வெல்லும் என்று அடித்து சொல்ல முடியாது. தேர்தலுக்கு ஒரு வாரம் உள்ளது. பிரச்சாரம் தற்போது உச்சக்கட்டத்தில் சென்று கொண்டு இருக்கிறது. தேர்தலின் கடைசி நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் நிலைமை மாறும்.

மாறும்

மாறும்

இந்த இழுபறி தொகுதிகளை தங்கள் பக்கம் திருப்பும் கட்சிகளே கேம் சேஞ்சர்களாக இருக்கும். திமுகவிற்கு இன்னும் 6 தொகுதிகளே கணிப்பின்படி தேவை என்பதால் எளிதாக வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது. அதிமுகவிற்கு 66 தொகுதிகள் தேவை என்றாலும் அது எட்ட முடியாத தூரம் கிடையாது.. பார்க்கலாம்.. கடைசி ஒரு வாரத்தில் எவ்வளவு திருப்பங்கள் நடக்கிறது என்று.

English summary
Sathiyam Tv opinion poll: The 70 hanging seats will decide the winner in DMK vs AIADMK fight in Tamilnadu assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X