‛இவிஎம்’ அறையில் பழுதாகும் சிசிடிவி.. தேர்தல் அதிகாரிகளுக்கு சத்யபிரதா சாகு போட்ட உத்தரவு.. அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் அடிக்கடி சிசிடிவி கேமராக்கள் பழுதாகி வருகின்றன. இதுதொடர்பாக இன்று மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது.

தமிழகத்தின் 39 தொகுதிகளில் மொத்தம் 69.72 சதவீத ஓட்டுகள் பதிவானது. தேர்தல் முடிவடைந்த பிறகு ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு ஸ்ட்ராங் அறையில் வைக்கப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 அடுக்குகளாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சிசிடிவி கேமராவில் பதிவாகும் காட்சிகளை திரையில் நேரடியாக ஒளிபரப்பபப்படுகின்றன. அதனை வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஏஜென்ட்டுகள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் தமிழகத்தில் தொடர்ந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி பழுதாகி வருகின்றன. ஈரோடு, தென்காசி, மதுரை, வடசென்னை உள்பட இன்னும் சில ஓட்டு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதான நிலையில் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டன. ஆனாலும் கூட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து பழுதாவதால் பொதுமக்களும் குழப்பம் அடைந்தனர்.
இதற்கிடையே தான் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உடனடியாக ஆலோசனை கூட்டம் காணொலி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது மற்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி என்பது மே 20ம் தேதி முதல் நடத்தப்பட வேண்டும் என அவர் அறிவுரை வழங்கினார்.
அதுமட்டுமின்றி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். மேலும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை ஏஜென்ட்டுகள் பார்க்கும் வகையில் கூடுதல் டிஸ்பிளேக்கள் பொருத்த வேண்டும். சிசிடிவி கேமராக்கள் பழுதாகாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications