பரங்கிமலை ரயில் நிலையத்தில் மகள் கொலை.. தந்தை மரணத்தில் திடீர் ட்விஸ்ட்.. மாரடைப்பு இல்லை தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு கீழே தள்ளிவிடப்பட்டு மாணவி கொல்லப்பட்ட செய்தியை அறிந்த அவரது தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாரடைப்பால் மாணிக்கம் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அருகே உள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (47). இவரது மனைவி வரலட்சுமி (43). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்,

இவர்களது மகள் சத்யா(20). இவர் தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23). இவரும் சத்யாவும் பள்ளி பருவத்தில் காதலித்ததும், சதீஷ் போதை பழக்கம் கொண்டவர் என தெரிந்ததால் அவரை விட்டு சத்யா விலகினார். இந்த நிலையில் தினமும் கல்லூரிக்கு சத்யா மின்சார ரயிலில் செல்வது வழக்கம். அது போல் நேற்று மதியமும் கல்லூரி செல்ல பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு சத்யா வந்தார்.

ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்

அப்போது அங்கு வந்த சதீஷ், சத்யாவிடம் தனது காதலை ஏற்குமாறு கூறியுள்ளார். ஆனால் இதற்கு சத்யா மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் சத்யாவை சதீஷ் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இவர்களுக்குள் வாக்குவாதமும் நடந்துள்ளது. அந்த சமயம் பார்த்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனிடையே காதல் தோல்வியால் ஆத்திரமடைந்த சதீஷ், சத்யாவை தண்டவாளத்தில் தள்ளி விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

மாணவிகள் அதிர்ச்சி

மாணவிகள் அதிர்ச்சி

அப்போது சத்யா மீது ரயில் சக்கரங்கள் ஏறி இறங்கியதால் மாணவியின் தலை தனியாகவும் உடல் தனியாகவும் சிதறியது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சத்யா உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த சத்யாவின் தோழிகள் அழுது கொண்டே ஓடி வந்தனர். அவர்கள் ரயில்நிலைய போலீஸில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் சதீஷ் துரைப்பாக்கத்தில் இருப்பதை அறிந்த தனிப்படை போலீஸார் அவரை அதிகாலை கைது செய்தனர்.

தந்தையும் பலி

தந்தையும் பலி

இதனிடையே சத்யா இறந்த சம்பவம் குறித்து அங்கிருந்த அவரது தோழிகள் சத்யாவின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மாணிக்கம் தனது மகளை நினைத்து கதறியுள்ளார். நேற்று முழுவதும் மன உளைச்சால் புழுங்கியுள்ளார். இந்த நிலையில் மகளின் இழப்பை ஏற்க முடியாமலும் பிரிவை தாங்கி கொள்ள முடியாமலும் மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முறிந்த காதலை ஒட்ட வைக்க இளைஞர் வெறி கொண்டதால் கொல்லப்பட்ட மாணவியின் உடலும், மகளின் பிரிவால் தற்கொலை செய்த தந்தையின் உடலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இரு உயிர்கள் பலியான சம்பவம் ஆதம்பாக்கத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நேர வாக்குவாதம்

நீண்ட நேர வாக்குவாதம்

மாணவி உயிரிழப்பு குறித்து அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், அந்த பெண்ணிடம் ஒரு பையன் நீண்ட நேரமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அந்த பெண் திநகர் செல்ல ரயிலுக்காக காத்திருந்ததாக தெரிகிறது. அப்போது ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை பிடித்து அந்த இளைஞர் கீழே தள்ளினார். இதனால் பதறியடித்தபடி அவரது தோழிகள் காப்பாற்றுவதற்கு ஓடி வந்தனர். அதற்குள் தாம்பரம் நோக்கி வந்த ரயில் அந்த மாணவி மீது ஏறியது. உடனை அனைவரும் கூச்சல் போட்டு ரயிலை நிறுத்தினர். அப்போது அந்த பெண்ணின் உடல் துண்டாகி கிடந்தது. இதை பார்த்த அந்த பெண்ணின் தோழிகள் கதறினர். அந்த பெண்ணை ரயில் முன்பு தள்ளிவிட்டுவிட்டு அந்த நபர் தப்பியோடிவிட்டார் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+