"அவமரியாதை.." ஆவேசமான ஈவிகேஎஸ் இளங்கோவன்.. பரபரத்த சத்தியமூர்த்தி பவன்
சத்தியமூர்த்தி பவனில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மேடையில் இடம் ஒதுக்காமல் அவமானப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
சென்னை: சத்தியமூர்த்தி பவன் என்றாலே சண்டையும் சச்சரவும்தான். அவ்வப்போது சண்டை சச்சரவு ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் மாநில தலைவர் அழகிரி முன்னிலையிலேயே அடிதடி சண்டை நடைபெற்றது. இன்று ராகுல்காந்தி வரும் போதும் சண்டையும் ஆவேச பேச்சுக்களும் அரங்கேறின.
Recommended Video
சண்டைக்கு காரணம் மேடையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இடம் ஒதுக்காமல் விட்டதுதான் என்ற குற்றச்சாட்டை அவரது ஆதரவாளர்கள் முன்வைத்தனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு மேடையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ராகுல்காந்தி சத்தியமூர்த்தி பவனுக்கு முன்பாக களேபரமும் சண்டையும் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து சென்னை வந்த ராகுல்காந்தி, நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் நடைபெற்ற உங்களில் ஒருவன் நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்று பேசினார். நகைச்சுவையாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பேசிய ராகுல்காந்தி இறுதியில் மோடியைத் தாக்கி ஆவேசமாக பேசினார்.
விழா நிறைவடைந்த பின்னர் சற்று நேர ஓய்வுக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார். அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சத்திய மூர்த்தி பவனில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு முழுவதும் இருந்தும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களுக்கு ராகுல் காந்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
சத்திய மூர்த்தி பவனில் ராகுல்காந்தி வருவதற்கு முன்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும் தற்போதைய தலைவர் கேஎஸ் அழகிரி ஆதரவாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்றது. ராகுல்காந்தி பேசும் மேடையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இடம் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனையடுத்து வாக்குவாதம் ஏற்படவே, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நாற்காலி போடப்பட்டது. பின்னர் ஆதரவாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications