"அரசியலுக்கு வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் சத்தியவாணி முத்து" -முதல்வர் ஸ்டாலின் பேச்சு
போராட்ட குணமும், தியாக உணர்வும் கொண்டவராக இறுதி மூச்சு வரை இருந்த காரணத்தினால் சத்தியவாணி முத்து இன்றைக்கும் போற்றப்படுகிறார் என முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.
சென்னை: பல்வேறு தியாகங்களை செய்தவர் சத்தியவாணி முத்து, போராளியாக வாழ்ந்தவர். போராட்ட குணமும், தியாக உணர்வும், அசைக்க முடியாத கொள்கை பற்றும் கொண்டவராக இறுதி மூச்சு வரை இருந்த காரணத்தினால் சத்தியவாணி முத்து இன்றைக்கும் போற்றப்படுகிறார் என முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்துவின் நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்துவின் நூற்றாண்டு விழாவில், சத்தியவாணி முத்து, அரசியலுக்கு வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார் என்றும் போராட்ட குணமும், தியாக உணர்வும், அசைக்க முடியாத கொள்கை பற்றும் கொண்டவராக இருந்ததால் இறுதி மூச்சு வரை இன்றைக்கும் போற்றப்படுகிறார் என தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.
சத்தியவாணி முத்துவின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு. க ஸ்டாலின் பேசியதாவது:-

கலைஞரின் அமைச்சரவையில்
அண்ணாவின் அமைச்சரவையில் அமைச்சராக, கலைஞரின் அமைச்சரவையில் அமைச்சராக தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகத்தின் தலைவராக நாடாளுமன்ற அமைச்சராக ஒன்றிய அமைச்சராக திமுகவின் ஆதிதிராவிட நலப்பிரிவு செயலாளராக, 1991 ஆம் ஆண்டு அகில இந்திய எஸ்.சி.எஸ்.டி ஆணையத்தின் தலைவராக சத்தியவாணி நியமிக்க வேண்டும் என்ற கலைஞரின் கோரிக்கையை பிரதமர் விபி சிங் ஏற்றுக்கொண்டார். ஆனால் அப்போது அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அதனால், சத்தியவாணி முத்து அந்த பொறுப்புக்கு அப்போது செல்ல முடியாமல் போயிவிட்டது.

ஊர்வலத்தை கலைக்க பார்த்தார்கள்
அதை மனதில் வைத்திருந்த கலைஞர் 1991- ஆம் ஆண்டு தந்தை பெரியார் விருதை சத்தியவாணி முத்துவிற்கு வழங்கி பெருமைப்படுத்தினார் என்பது வரலாறு. அப்போதுதான் முதன் முதலாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருந்தார். முப்பெரும் விழாவைக்கூட சென்னையில் நடத்த விடக்கூடாது என்று கலவரத்தை ஏற்படுத்தினார்கள். மிகப்பெரிய ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல்லெறிந்து ஊர்வலத்தை கலைக்க பார்த்தார்கள்.

இறுதி மூச்சு வரை
அப்பொழுதும் தைரியமாக துணிந்து வந்தார். மூன்று நான்கு தெருக்கள் கடந்து எப்படியோ மேடைக்கு வந்துவிட்டார். தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் குறித்து எழுச்சியுரை ஆற்றினார். அந்த நாளை எண்ணிப்பார்க்கிறேன். போராட்ட குணமும் தியாக உணர்வும், அசைக்க முடியாத கொள்கை பற்றும் கொண்டவராக இறுதி மூச்சு வரை இருந்த காரணத்தினால் சத்தியவாணி முத்து இன்றைக்கும் போற்றப்படுகிறார்.

போராளியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்
இதனை இக்கால மகளிர் அணியினரும் உணரவேண்டும் என்றுதான் இந்த நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. இத்தனை பதவிகளில் இருந்தார் என்றால் அத்தகைய தியாகங்களை செய்து இருக்கிறார் என்ற அந்த காரணம் தான். இத்தனை ஆண்டு காலத்திற்கு பிறகும் போற்றப்படுகிறார் என்றால் அந்த அளவிற்கு ஒரு போராளியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்பதற்காகத்தான். இவ்வாறு அவர் கூறினார்.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications