மேல கை வைக்காதீங்க சார்...! போலீசிடம் கடுப்பான சாட்டை துரைமுருகன்
திருவள்ளூர்: தொடர்ந்து வதந்தி பரப்பும் வகையில் பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனை சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்து சென்றபோது மேல கை வைக்காதீங்க சார் என போலீசாரை பார்த்து கடுப்பான வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை, அடிப்படை வசதிகள் இல்லை உட்பட பல புகார்கள் எழுந்தன.
கடந்த மாத இறுதியில் விடுதியில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராட்டம்
அதில் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இருப்பினும், சில பெண்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து விடுதி நிர்வாகம் முறையாகப் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

யூட்யூபர் சாட்டை துரைமுருகன்
இந்த சம்பவம் தொடர்பாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் தனது ட்விட்டரில் வதந்தி பரப்பும் வகையிலான கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. ' பெண்கள் 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும், சீன நிறுவனமான Foxconnல் பணிபுரிந்த பெண்களில் 57 பேருக்கு நச்சுத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டதால் வாந்தி மயக்கம். இதுவரை 9 பெண்கள் இறந்துள்ளனர். ஆயிரம் பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர்' என்றும் அவர் தொடர்ச்சியாக ட்வீட் போட்டதாக தெரிகிறது.

குண்டர் சட்டத்தில் கைது
இதனை தொடர்ந்து ஃபாக்ஸ்கான் ஆலை பெண் ஊழியர்கள் உயிரிழந்ததாக வதந்தி பரப்பியதாகச் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். யூடியூப்பில் வெளியிட்ட வீடியோ தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்ட்டது. இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் யுடியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டம் சட்டம் பாய்ந்துள்ளது. அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்
Recommended Video

போலீசாரிடம் கோபம்
இதையடுத்து திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாட்டை துரைமுருகன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கு அவரது வழக்கறிஞர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர். அவர்களிடம் பேசிக் கொண்டே வந்த சாட்டை துரைமுருகனை தலைமைக் காவலர் ஒருவர் கையை பிடித்து அழைத்துச் செல்ல முயன்றார். சார் மேல கை வைக்காதீங்க... கையை எடுங்க எனக் கூறினார். இதையடுத்து அந்த தலைமைக் காவலர் கையை எடுத்த நிலையில் வேன் அருகே சென்ற துரைமுருகன், தனது மனைவியை தைரியமாக இருக்கச் செல்லுங்கள் என தனது வழக்கறிஞரிடம் கூறினார். தொடர்ந்து துரைமுருகனை புழல் சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications