சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுஜித்தை காப்பாற்ற விரைந்த அண்ணா பல்கலை. பேராசிரியர் குழு.. டிராபிக் நெரிசலில் சிக்கியதால் தாமதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Two year old boy falls into abandoned borewell near trichy

    சென்னை: மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை காப்பாற்றும் முயற்சியாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து 10 பேர் கொண்ட பேராசிரியர் குழு திருச்சி விரைந்துள்ளது.

    நேற்று மாலை 5.40 மணியளவில் குழந்தை, சுஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. அப்போது 30அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருந்த குழந்தை, மீட்பு பணிகளின் போது ஏற்பட்ட பின்னடைவால், இப்போது 70 அடி ஆழத்துக்கு, மேலும் கீழே சென்றுவிட்டது.

    Save Sujith: Anna university professors rushing

    ஏற்கனவே அங்கே உள்ள மீட்புக் குழுவினரால் இதை தடுக்க முடியவில்லை என்பதோடு, மீட்பு பணியில் தொடர்ந்து சிரமம் நிலவுவதால், அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோளை ஏற்று, சென்னையிலிருந்து அண்ணா பல்கலைகழக பேராசிரியர்கள் 10 பேர் நடுக்காட்டுப்பட்டி விரைந்துள்ளனர்.

    ஆனால், திண்டிவனம் அருகே சாலை விபத்து ஒன்று ஏற்பட்டு அதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் நிலவுவதால், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழு போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டு இருக்கிறது.

    விடிய விடிய நின்றபடி.. அசராமல் மீட்பு படையினரை தட்டிகொடுத்து முடுக்கி விட்ட அமைச்சர்கள்! #SaveSujithவிடிய விடிய நின்றபடி.. அசராமல் மீட்பு படையினரை தட்டிகொடுத்து முடுக்கி விட்ட அமைச்சர்கள்! #SaveSujith

    எனவே முன்கூட்டியே அவர்களால் நிகழ்விடத்துக்கு வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஏற்கனவே பல்வேறு குழுக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக குழுவையும் எதிர்பார்த்து மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    English summary
    Anna university professors rushing towards Trichy to rescue 2 year old boy Sujith.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X