-10000 +2000.. சின்னதா ஒரு ஸ்மார்ட் ஐடியா.. குழந்தைகள் கல்வி செலவுக்கு வங்கிகளே அள்ளி தருவாங்க!
சென்னை: குழந்தைகளின் கல்வி செலவுக்கு சேமிக்காமல் விட்டதால், நகைகளை அடகு வைக்கலமா அல்லது பர்சனல் லோன் போடலாமா அல்லது கடன் வாங்கலமா என்று யோசிக்கிறீர்களா.. இப்படி செய்தால் வங்கிகளுக்கு நீங்கள் பணம் வட்டியாக பெருந்தொகை கட்ட வேண்டியிருக்கும், மாறாக அடுத்த ஆண்டு இதை பின்பற்றி பாருங்கள், நிச்சயமாக வங்கிகள் உங்களுக்கு வட்டி தரும்.
யார் ஸ்மார்ட்டாக யோசிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆகிறார்கள். உங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி தர வேண்டும் ஆசைப்படுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நீங்கள் அதற்காக அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் தான் நல்ல பள்ளிகள் என்று நினைத்து விட வேண்டும்.

அரசு பள்ளிகளுக்கும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. எனக்கு தெரிந்து காரைக்குடியில் உள்ள அரசு பள்ளியில் சேருவது மிக கடினம். அந்த அளவிற்கு அங்கு வசதிகள் அதிகம். மக்கள் போட்டி போடுவார்கள். சென்னை பல்லாவரத்திலும் உள்ள ஒரு அரசு பள்ளியில் சேருவதற்கு மக்கள் முட்டி மோதுவார்கள். எனக்கு தெரிந்தது இந்த இரண்டு மட்டுமே.. உங்களுக்கு இன்னமும் நிறைய தெரிந்திருக்கும். உங்கள் பொருளாதார வசதிகளுக்கு ஏற்ப பள்ளிகளை முடிவு செய்யுங்கள். பணக்காரர்கள் படிக்கும பள்ளியில் படித்தால் தான் குழந்தைகள் சிறப்பாக வளருவார்கள் என்ற நம்பிக்கை வேண்டாம். எங்கு படித்தாலும் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை உங்களால் கொடுக்க முடியும்.
சரி விஷயத்திற்கு வருவோம்.. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் தொடங்கும் புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உணர்வு பல பெற்றோர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. பள்ளி கட்டணம் மட்டுமின்றி, பள்ளிக் கட்டணம் மட்டுமில்லாமல், புத்தகம், சீருடை, இதர கல்வித் தேவைகள் என்று ஒவ்வொரு வருடமும் குழந்தைகளின் கல்விக்கான செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

கடன் வாங்கி சமாளித்துவிடலாம், நகைகளை அடகு வைத்து பள்ளிக் கட்டணம் கட்டி விடலாம் என்று நினைக்காதீர்கள். இதனால் வங்கிகளில் வட்டி கட்டி, நகைகளை திருப்ப முடியாமல் அவதிப்படும் சூழலும் எதிர்கொள்ளும் நிலை வரலாம். இந்த சிரமங்களை களைய, 'சரியான திட்டமிடுதல்' அவசியம். இதன் மூலம் சிரமம் இல்லாமல் கல்வி கட்டணத்தை செலுத்தலாம்.
ஒரு பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்ப்பதற்கு முன்பு, அதன் கட்டணங்கள் உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றதா? என்பதை யோசியுங்கள், ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்குச் செலுத்த வேண்டிய மொத்தக் கட்டணம் எவ்வளவு என்று பாருங்கள். உதாரணமாக உங்கள் குழந்தைக்கான ஓராண்டு கல்விக் கட்டணம் ரூபாய் 50 ஆயிரம் என வைத்துக் கொள்ளுங்கள். அதை 10 மாதங்களுக்கு கணக்கிட்டால் மாதம் ரூ.5,000 ஆகும். நீங்கள் இரண்டு குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் இந்த தொகை மாதம் ரூபாய் 10 ஆயிரமாக உயரும். உங்களுடைய மாத சம்பளத்தில் குடும்பச் செலவுகள் போக, குழந்தைகளின் கல்விக்கு இந்தத் தொகையை உங்களால் ஒதுக்க முடியும் என்றால் சிந்தியுங்கள்.
ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ஒதுக்கி வைத்தால், வருடத்தின் முடிவில், 60 ஆயிரம் ஆக இருக்கும். அதில் பள்ளிக் கட்டணமாக ரூபாய் 50 ஆயிரம் கட்டினால் மீதம் இருக்கும் தொகையை சீருடை, போக்குவரத்து, சுற்றுலா போன்ற இதர கட்டணங்களுக்குச் செலவு செய்ய முடியும்
இதற்கு வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் கணக்கு ஒன்று தொடங்கலாம். மாதந்தோறும் உங்கள் சம்பளப் பணம் வந்ததும் இந்த ஆர்.டி. கணக்கில் தானாகவே வரவு வைக்கும்படி செய்து விடுங்கள், ஒரு வருடம் முடியும்போது அதை அப்படியே பள்ளியில் கட்டி விடலாம். பின்னர் உடனடியாக அடுத்த ஆர்.டி. தொடங்கி அடுத்த கல்வியாண்டுக்காக சேமிக்கத் தொடங்கலாம். எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிசிஐ உள்பட பல்வேறு வங்கிகள் இதற்கு கணிசமாக வட்டியும் தருகின்றன.

உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் மாதம் ஐந்தாயிரத்தை வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி டெபாசிட் செய்தால், 2024 ம் ஆண்டு ஜூன் மாதத்தின் போது உங்கள் கையில் 62,378 ரூபாய் இருக்கும். அதாவது வட்டியாக மட்டும் 2,378 ரூபாய் கிடைக்கும். ஹெச்டிஎப்சி வங்கியில் என்றால் 62179 ரூபாய் உங்கள் கையில் இருக்கும். அதாவது வட்டியாக மட்டும் 2179 ரூபாய் வங்கிகள் உங்களுக்கு தரும். வயதானவர்கள் பெயரில் தொடங்கினால் இன்னும் கொஞ்சம் கூடுதலான வட்டி தொகையும் கிடைக்கும்.
ஸ்மார்ட்டாக யோசித்தால் வங்கிகள் உங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2100 ரூபாய் வட்டியாக தருவார்கள், அத்துடன் சிக்கலும் இருக்காது. மாறாக சேமிக்கமால் நீங்கள் 50 ஆயிரம் பர்சனல் லோன் வாங்கினால் வங்கிகளுக்கு நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் வரை வட்டி மற்றும் பிராசசிங் பீஸ் ஆக தர வேண்டியதிருக்கும். எந்த வங்கியும் மிககுறைந்த கடனமாக இருந்தாலும், 18 மாதங்களாவது இஎம்ஐ போட்டால் தான் தருகின்றன. அப்படி செய்தால் தான் கடன் தருவர்கள். நிதிநிறுவனங்களில் இன்னமும் கூடவே வட்டி இருக்கும். எனவே ஸ்மார்ட்டாக யோசியுங்கள். அப்போதுதான் கடனில் விழாமல் தப்பிக்க முடியும்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications