இலையில் அங்கப்பிரதட்சணம்! சவுக்கு சங்கர் கேஸ் நீதிபதி.. முதல்வருக்கு போன மேட்டர்.. இந்து முன்னணி நச்
சென்னை: தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என இந்து முன்னணி கேள்வி எழுப்பியிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
கடிதம்: அந்த கடிதத்தில், "சென்னை ஹைகோர்ட் நீதிபதிகளான மணிக்குமார், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் எச்சில் இலைகளில் வேறு சிலர் படுத்து உருளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற சடங்கு தொடர்பான வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிறார். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தந்துள்ள சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் குறித்து விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நீதிபதியாக ஜி. ஆர். சுவாமிநாதன் தொடர்வதற்கு தகுதி இல்லை" என்று தெரிவித்துள்ளார். இதே போன்ற கருத்தையும் தந்தை பெரியார் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கு. ராமகிருஷ்ணனும் தெரிவித்துள்ளார்.
கேள்வி: இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என இந்து முன்னணி கேள்வி எழுப்பியிருக்கிறது. அக்கட்சியின் காடேஸ்வரா சுப்ரமணியம் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
"சமீபத்தில் சவுக்கு சங்கரின் தாய் தொடுத்த வழக்கை, உடனடியாக விசாரிக்கக் கூடாது என்று தனக்கு அதிகாரம் மிக்க நபர்கள் தொடர்பு கொண்டதாக ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் கூறியிருந்தார்.
அங்கபிரதட்சணம்: சில வாரங்களுக்கு முன் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி விழாவில் பக்தர்கள் உணவு சாப்பிட்ட இலையில், பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்குவது குறித்த வழக்கில், "இது சமய நம்பிக்கை நிகழ்ச்சி, இதை யாரும் தடுக்க முடியாது. அரசியல் சாசனம் அளித்துள்ள வழிபாட்டு உரிமைக்கு அரசின் அனுமதி கேட்க வேண்டியதில்லை" என்று கூறி தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பு, அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், நீதிபதி சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.க.,வினர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
வளாகம்: கோர்ட் வளாகத்தில் மிரட்டல் விடுத்தும், உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தும் நீதிபதியை மிரட்டுவது தமிழகத்துக்கு தலைகுனிவு. இத்தகைய போக்கு குறித்து எந்த கட்சியினரும் வாய் திறக்கவில்லை என்பது வேதனையான விஷயம். இத்தகைய செயல்பாட்டை இந்து முன்னணி கண்டிக்கிறது. தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications