எப்போ வேண்டுமானாலும் என்னை தூக்கிருவாங்க! மிட்நைட்டில் வீடியோ வெளியிட்ட சவுக்கு சங்கர்! என்னாச்சு?
சென்னை: பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் விமர்சனம் என்ற பெயரில் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தனை இழிவுபடுத்தி பேசியுள்ளார் எனவே சவுக்கு சங்கர் மீதும், அவரது உதவியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுஜன் சமாஜ் கட்சியினர் புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தன்னையும் தனது குழுவினரையும் எப்போது வேண்டுமானாலும் போலீசார் கைது செய்யலாம் என சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. இதனையடுத்து சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி சவுக்கு சங்கர் தன்னை 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் பணம் தர மறுத்ததால் தன்னை தாக்கியதாக சினிமா தயாரிப்பாளரான மகேஷ் ரம்யா என்பவர் புகார் அளித்தார்.
புகார் தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி ஜாமினில் வெளிய வந்தார். இதற்கிடையே சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பழனி தலைமையிலான கட்சியினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதில்," கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியலமைப்பு சட்டம் தந்த கருத்து சுதந்திரத்தை சவுக்கு சங்கர் தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருவதாகவும், விமர்சனம் என்ற பெயரில் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆனந்தனை இழிவுபடுத்தி பேசி வரும் நிலையில் சவுக்கு சங்கர் மீதும் அவரது உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்திருந்தனர்.
புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பகுஜன் சமாஜ் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர், மாலதி மற்றும் அவரது குழுவினர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என சவுக்கு சங்கர் கூறியிருக்கிறார்.
" நீதிமன்றங்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தான் ஜாமினில் வெளி வரக் கூடாது என்பதற்காகவே இரவு அல்லது அதிகாலையிலையோ தான் கைது செய்யப்படலாம் எனவும், இந்த கைது நடவடிக்கை ஜாமீன் கிடைக்கக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
மேலும் தங்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும், அலுவலகம் சீல் வைக்கப்பட இருப்பதாகவும் கூறிய சவுக்கு சங்கர், தேர்தலுக்கு முன் சவுக்கு மீடியாவை முழுமையாக அடக்க அரசு முயற்சிப்பதாகவும், அடுத்து 45 நாட்களுக்கு எவ்வளவு அடக்குமுறைகளை ஏவ முடியுமோ அவ்வளவுவற்றையும் தமிழ்நாடு அரசு செய்து வருவதாகவும், இதற்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் எனக் கூறியிருக்கிறார்.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications