சவுக்கு சங்கர் கைது அப்பட்டமான துன்புறுத்தல்! காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம்
சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் கைது அப்பட்டமான துன்புறுத்தல் என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னொரு முறை அவரை கைது செய்த போதும் கார்த்தி, சவுக்கு சங்கருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "நான் சவுக்கு சங்கரை ஆதரிக்கவில்லை என்றாலும், அவர் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது அப்பட்டமான துன்புறுத்தலாகும் என தெரிவித்துள்ளார்.
அவதூறாக பேசி தன்னிடம் இருந்து 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா கடந்த மாதம் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீஸார் இன்று காலை சவுக்கு சங்கரின் ஆதம்பாக்கம் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு அவரது வீட்டுக் கதவை போலீஸார் தட்டினர். அப்போது உள்பக்கம் தாழிடப்பட்டிருந்ததால் சவுக்கு சங்கரை கைது செய்ய முடியவில்லை. மேலும் தனது வழக்கறிஞர்கள் வந்தால்தான் கதவை திறப்பேன் என சவுக்கு தெரிவித்தார்.
நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் தீயணைப்பு படையினர் உதவியுடன் அவரது வீட்டுக் கதவை கடப்பாரை கொண்டு உடைத்தனர். இதையடுத்து சவுக்கு சங்கரை ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து கைது செய்தனர்.
சவுக்கு சங்கர் கைதுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications