‛‛திமுக தான் டார்கெட்’’.. ‛எக்ஸ்’ வலைதள முகப்பு பக்கத்தில் எடப்பாடி செய்த மாற்றம்.. கவனிச்சீங்களா!
சென்னை: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் எக்ஸ் வலைதளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென்று தனது பெயருக்கு பக்கத்தில் திமுகவை விமர்சனம் செய்யும் வகையிலும் பயோவை மாற்றி வைத்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார். பாஜகவை கூட்டணியில் இருந்து அதிமுக கழற்றிவிட்டுள்ளது. இந்நிலையில் தான் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்து வருகிறார்.

மேலும் அவர் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் எக்ஸ் பக்கத்தின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி திமுகவுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
அதன்படி எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதளத்தில் முகப்பு பக்கத்தில் தனது பெயருக்கு அருகே ‛‛Say No To Drugs & DMK’’ என எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ளார். இதன்மூலம் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் திமுகவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி புதிய பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
மேலும் இதுதொடர்பான போட்டோவை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு அதில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அந்த பதிவில், ‛‛ மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற நிலையில், இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், வருகின்ற மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது …

கழகத்தின் தொடர்ச்சியான போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக, என்னுடைய டிவிட்டர் “X” தளத்தின் முகப்பு பக்கத்தில் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை இன்று இணைக்கிறேன். கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்!’’ என தெரிவித்துள்ளார்.
-
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
செங்கோட்டையன் பாணியில் களமிறங்கிய சிவி சண்முகம்.. திடீரென எடப்பாடிக்கு எதிராக கொந்தளிப்பது ஏன்? -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications