ஏடிஎம் கொள்ளை.. சென்னைக்கு கொண்டுவரப்பட்ட வீரேந்திர ராவத்.. அவிழப்போகும் மர்ம முடிச்சுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணத்தை திருடிய குற்றவாளிகளில் மேலும் ஒருவர் அரியானாவில் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: கடந்த 15.06.2021 முதுல் 18.06.2021 வரையில் சென்னை பெருநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்களில் சிலர் பணம் எடுப்பது போல சென்று ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து நூதன முறையில் சுமார் ரூ.45 லட்சம் பணததை திருடியுள்ளனர்.

மேலும் பல இடங்களில் தாக்கலான புகாரின் பேரில் இதுவரை 15 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி நூதன கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின் பேரில், கூடுதல் ஆணையாளர் (தெற்கு0 அவர்களின் தலைமையில் பல குழுக்களாக தனிப்படையினர் நியமிக்கப்பட்டு, இணை ஆணையாளர் (தெற்கு மண்டலம்), துணை ஆணையாளர்கள் தியாகராய நகர் மற்றும் கீழ்பாக்கம் அவர்களின் வழிநடத்தலுடன், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநபர்கள் கொண்ட பல்வேறு விசாரணைக் குழுக்காக நியமனம் செய்யப்பட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றவாளி கைது

குற்றவாளி கைது

தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளில் ஆய்வு செய்ததில் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் மேற்படி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததின் பேரில், தீவிர விசாரணை செய்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் அரியானா மாநிலத்தில் பதுங்கியிருந்த குற்றவாளி அமீர் அர்ஷ், என்பவரை தனிப்படையினர் 23.06.2021 அன்று கைது செய்து அவரிடமிருந்து பணம் ரூ.4.5லட்சம் பறிமுதல் செய்தனர். பின்னர் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றவாளி அமீர் அர்ஷ் என்பவரை சென்னை அழைத்து வந்து, விசாரணைக்குப் பின்னர் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காலுக்கு உட்படுத்தினர்.

வீரேந்திர ராவத்

வீரேந்திர ராவத்

மேலும் தனிப்படையினர் தீவிர விசாரணை செய்ததில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 9 நபர்கள் ஒருங்கிணைந்து, மேற்கண்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது. 9 நபர்களில் மேலும் ஒருவரின் முகாந்திரம் தெரியவந்ததின் பேரில் தனிப்படையினர் அரியானா மாநிலம் சென்று அரியான மாநில காவல் துறையினிருடன் ஒருங்கிணைந்து தேடுதல் வேட்டை நடத்தி, இவ்வழக்கில் தொடர்புடைய அரியானா மாநிலத்தைச் சேர்ந்த வீரேந்திர ராவத் (வயது 23) என்பவரை கைது செய்து, இன்று சென்னைக்கு அழைத்து வந்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட் உள்ர்.

தீவிர தேடுதல் வேட்டை

தீவிர தேடுதல் வேட்டை

மேலும் இந்தகுற்ற வழக்கில் 9 நபர்கள் ஒரே குழுவாக ஒருவரின் தலைமையில் செய்துள்ளதாகவும், அனைவரின் முகாந்திரம் கிடைக்க பெற்று உள்ளதால், தி.நகர் துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினர் அரியானா மாநிலத்தில் முகாமிட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

9 குற்றவாளிகள்

9 குற்றவாளிகள்

இதுவரை, சென்னையில் 15 குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள 9 குற்றவாளிகள், மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 குற்ற நிகழ்வுகளிலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா 1 குற்ற நிகழ்வுகளிலும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது" இவ்வாறு சென்னை மாநகர காவல்துறை செய்திகுறிப்பில் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+