எஸ்பிஐ டிஜிட்டல் சேவைகள் முடங்கியது.. 3 மணி நேரம் இயங்காது என அறிவிப்பு! யுபிஐ பயனர்கள் தவிப்பு
சென்னை: நாடுமுழுவதும் எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவைகள் முடங்கியுள்ளது. மொபைல் பேங்கிங், இண்டெர்நெட் பேங்கிங், யுபிஐ சேவைகளும் முடங்கியதால் பயனர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மாலை 4 மணி வரை டிஜிட்டல் சேவைகள் இயங்காது என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ உள்ளது. நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ வங்கி இயங்கி வருகிறது. தற்பொது டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து இருப்பதால் வங்கி சேவைகள் பெரும்பாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமே நடைபெறுகிறது.

அந்த வகையில், பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரை யுபிஐ பயன்படுத்தி மக்கள் பண பரிவர்த்தனைகள் செய்கிறார்கள். கையில் ஒரு ரூபாய் இல்லாமல் கூட சாலையோர கடையில் இளநீர் முதல் கொண்டு பெரிய வணிக வளாகங்களில் பல ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கூட வாங்க முடியும் அளவுக்கு யுபிஐ சேவையானது பரந்து விரிந்துவிட்டது.
தற்போது யுபிஐ செயலி வாயிலாகவே பலரும் செல்போன் ரீசார்ஜ், மின் கட்டணம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தான் இன்று மதியம் எஸ்பிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ ஐடிக்கள் திடீரென முடங்கின. சர்வர் டவுன் என வந்ததால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்தனர். ரீசார்ஜ் செய்ய முடியாமலும் டீக்கடைகளில் பில் பேமண்ட் செய்ய முடியாமலும் பயனர்கள் தவித்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களிலும் பலரும் இது குறித்து பதிவிட்டு வருகிறார்கள். இதனிடையே, எஸ்பிஐ வங்கி இது தொடர்பாக கூறுகையில், "ஆண்டு கணக்கு முடிப்பு நடவடிக்கைகள் காரணமாக இன்று எங்களின் டிஜிட்டல் சேவைகள் நண்பகல் 1 மணியில் இருந்து 4 மணி வரை கிடைக்காது. யுபிஐ லைட் மற்று ஏடிஎம்களை தடையில்லா சேவைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி அதுவுமாக எங்களை இப்படியா தவிக்க விடுவது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications