சிறுநீர் கழித்து.. பரியேறும் பெருமாளை மிஞ்சும் சாதி பயங்கரம்! இந்து முன்னணி ஆதரவு என விசிக புகார்
சென்னை: பரியேறும் பெருமாள் படத்தில் வருவதைபோல் பட்டியலின மாணவர்களை ஆதிக்க சாதியினர் கொடூரமாக தாக்கி சிறுநீரை வாயில் ஊற்றிய கொடூரம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே நடந்து இருக்கிறது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட பொலவக்காலி பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர்கள் நவீன் குமார் மற்றும் கிருபாகரன். கல்லூரி மாணவர்களான இவர்கள் இருவரும் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தண்ணீர் தொட்டி அருகே அமர்ந்து இருந்து உள்ளனர். அப்போது அங்கு வந்த ஆதிக்க சாதியினர், சாதி பெயரை சொல்லி திட்டி அமர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

அத்துடன் அந்த மாணவர்களின் பைக்கை பிடிங்கிச் சென்றதுடன் மறு நாள் காலை இரும்பு கம்பியால் தாக்கி சிறுநீர் கழித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும், ஆனால், அவர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணியினர் நடத்திய போராட்டம் காரணமாக அவர்களை கைது செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், "ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட பொலவக்காலி பாளையம், இந்திரா நகரைச் சார்ந்த நவீன் குமார், கிருபாகரன் கல்லூரி மாணவர்கள். கடந்த 20.11.2023 அன்று மதுக்கடைக்கு அருகே உள்ள தண்ணீர் தொட்டியின் கீழே அமர்ந்து இருக்கிறார்கள். அருகே உள்ள தெருவைச் சார்ந்த சாதியவாதிகள் "ஏண்டா (சாதி பெயர்) பயலுகளா இங்க வந்து எதுக்குடா உக்காந்து இருக்கீங்க. இங்க வந்து தண்ணி அடிக்கவா" என மிதித்து அடித்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் - கோபிச்செட்டிபாளையம் தாலுகாவுக்குட்பட்ட பொலவக்காலி பாளையம்-இந்திரா நகரைச்சார்ந்த
— வன்னி அரசு (@VanniKural) November 25, 2023
நவீன் குமார்,கிருபாகரன்
கல்லூரி மாணவர்கள்.
கடந்த 20.11.2023 அன்று
மதுக்கடைக்கு அருகே உள்ள Water tank கீழே அமர்ந்திருக்கிறார்கள்.
அருகே உள்ள தெருவைச்சார்ந்த சாதியவாதிகள்
“ ஏண்டா… pic.twitter.com/I82iEC8Jf2
மாணவர்களிடம் இருந்த பைக்கையும் புடுங்கி சென்று உள்ளனர். பைக் இல்லாததால் வீட்டுக்கு போகாமல் அங்கேயே இரவு படுத்து உள்ளனர். மீண்டும் அதிகாலை 6 மணிக்கு வந்த சாதி வெறியர்கள், "ஏண்டா இன்னுமா இங்க இருக்கீங்க" என ராடு வைத்து அடித்து உள்ளனர். அடித்த அடியில் பாதி மயக்கமுற்ற மாணவர்கள், தண்ணீர் வேண்டுமென கேட்டு இருக்கின்றனர். உடனே, "(சாதி பெயர்) பயலுகளா இந்தாடா தண்ணி" என சிறுநீரை கழித்து திணித்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரின் பேரில் 20 சாதி வெறியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், சாதியவாதிகளை கைது செய்யக்கூடாது என இந்து முன்னணி போராட்டம் நடத்தியதால், எந்த சாதி வெறியனையும் போலீசார் கைது செய்யவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களும் இந்துக்கள் தான். ஆனால், இந்து முன்னணி சாதியவாதிகளுக்கே ஆதரவாக இருக்கிறது.
காவல்துறையும் சாதியவாதிகளுக்கு அஞ்சி கைது செய்யாமல் கட்ட பஞ்சாயத்து செய்து வருகிறது. இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறோம். சிறுநீரை வாயில் ஊற்றி வன்கொடுமை செய்த சாதியக் கும்பலை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications