Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் திருப்பம்-உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்க வாய்ப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் புதிய திருப்பமாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு காலஅவகாசம் வழங்குவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என வழக்கு தொடர்ந்த சங்கர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதால் கூடுதல் அவகாசம் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டு நடைமுறைகள் தொடர்ந்து வருகின்றன. தற்போது, தமிழகத்தில் புதிதாக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன,

SC to give more time to hold TN Urban Local Body Election?

தமிழ்நாட்டில் முன்னதாக 528 பஞ்சாயத்துகள் இருந்த நிலையில் தற்போது இது குறைந்துள்ளது. நகர பஞ்சாயத்துகள் 664 என்ற எண்ணிக்கை இருந்த நிலையில் தற்போது கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாநகராட்சிகளும் 28 நகராட்சிகளும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளன,

திருச்சி, நாகர்கோவில், ஓசூர், தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. எனவே தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கால அவகாசம் வழங்க மனுதாரரான தங்கள் தரப்புக்கு எந்த ஆட்சேபனை இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரமணா பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாத கால அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாத கால அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்தது.

மேலும் கால அவகாசம் வழங்குவதில் ஆட்சேபனை உள்ளதா என்பது தொடர்பாக மனுதாரர் சங்கர் தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல உள்ளாட்சி தேர்தலை நடத்த எவ்வளவு கால அவகாசம் தேவைப்படுகிறது என்பது தொடர்பாக பதிலளிக்கவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+