படிக்கச் சொல்லி அறிவுரை கூறியதால் மன உளைச்சல்.. பாத்ரூமுக்குள் போன மாணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!
சென்னை : நன்றாகப் படி என தொடர்ந்து பெற்றோர் அறிவுறுத்தி வந்ததால், மனமுடைந்து 9ஆம் வகுப்பு மாணவன் குளியல் அறைக்குள் சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் ஜோதி நகர் ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் பரிமளராஜ். இவரது மகன் ரிஷி (15). இவர், எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று ரிஷி குளியல் அறைக்குள் சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் மற்றும் அண்ணன் இருவரும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரிஷி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சாத்தாங்காடு காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் ரிஷி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரிஷிக்கு சரியாக படிப்பு வராதாம். இதனால் அவரை ஒழுங்காக படிக்கும்படி அவரது பெற்றோரும், உறவினர்களும் அவருக்கு அடிக்கடி அறிவுரை கூறி வந்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவன் ரிஷி தற்கொலை செய்ததாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications