Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புதல்வன் திட்டம்! பள்ளி மாணவர்களுக்கு இனி மாதம் ரூ.1000.. தமிழ்நாடு அரசின் மாபெரும் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிட, அரசுப் பள்ளி மாணவரின் உயர் கல்வி சேர்க்கையை உயர்த்தவும் தமிழ் புதல்வன் என்னும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும்.

மேலும் அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

School Boy students to get Rs.1000 says Minister Thangam Thennarasu in Tamil Nadu Budget 2024

தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

மகளிர் இலவச பேருந்து பயண 'விடியல் பயணம்' திட்டத்திற்கு இந்த ஆண்டில் ₹3050 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ₹13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள், பாடப்புத்தகங்கள் ,பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவரது கல்வியை மெருகேற்ற உதவிடும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும், இதன் மூலம் 6 முதல் 12 வரை பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சமூகநீதி, ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றம், தமிழ்நாட்டு இளைஞர்களை சர்வதேச சாதனையாளர்களாக மாற்றுவது, அறிவுசார் பொருளாதார வளர்ச்சி, சமநிலையுடன் கூடிய பெண் முன்னேற்றம், நிலையான எதிர்காலம், தமிழ்மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும். தமிழ் மொழியை நவீனப்படுத்த கிமி உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும். ₹65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும். கீழடியில் ₹17 கோடி செலவில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.

உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும். பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். க.அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி பள்ளி கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 100 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் தமிழர்களை தலைநிமிரச் செய்துள்ளன. 1990-ல் இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.550 கோடி ஒதுக்கப்பட்டது; காலை உணவு திட்டத்திற்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது; மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+