தேர்வு நேரம்.. நெருங்கும் பப்ளிக் எக்ஸாம்.. பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நடத்துவதற்கு மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. 19ஆம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் முடிவடையும். இவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12 முதல் 17ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

மார்ச் 4ஆம் தேதி பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் தொடங்கி 21ஆம் தேதி முடிவடைய உள்ளன. முன்னதாக செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19 முதல் 24ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் வரை தேதி வரை நடைபெறுகிறது. 2024 பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ஆம் தேதி வரை 10ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வு நடைபெறுகிறது. மே 10-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இந்த நிலையில் 10, 11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க, மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித் துறையில் மாநில அளவில் பணியாற்றும் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் உள்ளிட்டோர் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 38 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications