தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை நீட்டிப்பா? பள்ளி கல்வித்துறை விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 9ம் தேதி தொடங்கி 3வது வாரத்தில் முடிந்தது. இதேபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி துவங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விடுமுறை நீட்டிப்பு என தவறான தகவல் பரவிய நிலையில், அது வதந்தி என்றும், அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிசம்பர் 20ம் தேதியுடன் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்துவிட்டது. இதேபோல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டிசம்பர் 23-ந்தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது. மெட்ரிக் பள்ளிகளுக்கு 21ம்தேதி முதலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டிசம்பர் 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. அனைத்து பள்ளி மாணவர்களும் அரையாண்டு விடுமுறையில் இருந்து வந்தனர்.

அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைத்தது. 2024-ம் ஆண்டு முடிந்து இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்திருக்கிறது. இந்நிலையில், ஜனவரி 2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளது. விடுமுறை முடிந்து நாளை மாணவர்கள் பள்ளிக்கு திரும்ப உள்ளார்கள்.
இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை இன்றுடன் முடிவடைந்து வியாழக்கிழமை(2-ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் சூழலில், பள்ளிகள் திறப்பு இன்னும் நான்கு தினங்கள் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வேகமாக பரவின.
வியாழக்கிழமை பிறகு வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் மட்டுமே வேலை நாளாகவும் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறையாகவும் வந்துள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்று வதந்திகள் பரவின, இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழக பள்ளிகல்வித்துறை, அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications