பள்ளிகள் விடுமுறை: சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் நடந்த குளறுபடிக்கு என்ன காரணம்?
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் என்பது மாவட்ட ஆட்சியர்களிடம் உள்ளது. ஒரு மாவட்டத்தின் நிர்வாக தலைவர் என்பதால் அந்த மாவட்டத்தில் மழை, புயல் மற்றும் பேரிடர் காலங்களில், சூழ்நிலை கருதி முடிவெடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு கலெக்டர் தான் விடுமுறை அறிவிப்பார். நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தும் ஏன் விடுமுறை அறிவிக்கப்படவில்லை.. இந்த குளறுபடிக்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதனால் மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், தமிழக அரசை கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மாணவர்கள் அவதி
ஏனெனில் நேற்று கனமழையின் காரணமாகச் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முக்கியச் சாலைகளிலும், சுரங்கப் பாதைகளிலும் நீர் தேங்கியது. இதனால் காலையில் பள்ளிக்குச் செல்லும் போதும், வேலைக்குச் செல்லும் போதும் பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டனர். அதேபோல் மாணவர்கள் அதிகாலை மழையில் நனைந்தபடி பள்ளிக்குச் செல்ல வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. பல இடங்களில் பள்ளி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து நனைந்தபடி தான் சென்றார்கள்.
ஆரஞ்சு அலர்ட்
வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்த பிறகும், மற்றும் களத்தில் மழை தீவிரமாகப் பெய்தும் விடுமுறை அறிவிக்காதது, நிர்வாகம் மக்களின் பாதுகாப்பைவிட வேறு காரணங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகப் பொதுமக்கள் கருதினார்கள். இதனாலேயே நேற்று கடுமையான விமர்சனங்களை அரசு எதிர்கொண்டது. அதேபோல் விடுமுறை அறிவிப்பு பொதுவாக முந்தைய நாள் மாலையிலோ அல்லது அன்றைய நாள் அதிகாலை 6 மணிக்குள் அறிவிக்கப்பட வேண்டும். இன்று காலை நிலைமை மோசமான பிறகும்கூட, எந்த அவசர அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
நிர்வாக அணுகுமுறை
"ஏன் அவசர கால முடிவை மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக எடுக்கவில்லை? முதல்வர் அல்லது தலைமைச் செயலாளரின் ஒப்புதலுக்காக ஏன் தாமதிக்க வேண்டும்?" என்ற கேள்விகளை மக்கள் சமூக ஊடகங்களில் எழுப்பினார்கள். எதிர்க்கட்சிகளுமே மாணவர்களின் பாதுகாப்பைப் புறக்கணித்துவிட்டதாக நேரடியாக அரசை விமர்சித்தன. இது அரசுக்கு தர்ம சங்கடமான நிலையை நேற்று ஏற்படுத்திவிட்டது.
மாவட்ட ஆட்சியர்கள் முடிவு
பொதுவாக மாவட்ட ஆட்சியர்கள் மழை, புயல் மற்றும் பேரிடர் காலங்களில், சூழ்நிலை கருதி முடிவெடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு கலெக்டர் தான் விடுமுறை அறிவிப்பார். அப்படி விடுமுறை எடுத்த விவரத்தை மட்டும் தலைமை செயலாளருக்கு (அதாவது முதல்வருக்கு) தகவலாக தெரிவித்தால் போதும். ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பது என்பது இப்போது தலைமை செயலகத்தில் முன்கூட்டியே தெரிவித்து, ஒப்புதல் பெற்று, அதன்பிறகு விடுமுறை அறிவிக்கப்படுகிறதா என்ற கேள்விகள் எழுகிறது. ஏனெனில் இவை தலைநகரமான சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.
முதல்வரின் ஒப்புதல்
எனவே தலைநகரை சுற்றியுள்ள பகுதியில் கனமழையின் போது விடுமுறை அறிவிப்பது என்பது ஒரு பெரிய அரசியல் முடிவாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் தலைமையிலான அரசுதான் ஒட்டுமொத்தப் பேரிடர் மேலாண்மைக்கு மக்கள் முன் பொறுப்புக் கூற வேண்டும். எனவே மாநில அரசின் முக்கியமான முடிவுகள், குறிப்பாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட தலைநகரை ஒட்டிய மாவட்டங்களுக்கு வரும்போது, முடிவுகள் மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, அரசு ஒரே குரலில் விடுமுறையை அறிவிக்க விரும்புவதாக தெரிகிறது. அதேபோல் விடுமுறை அறிவிக்கப்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாடாக மற்றொரு நாளில் வேலை நாளாக அறிவிக்க வேண்டியிருக்கும். இந்த மாற்று ஏற்பாடு குறித்த முடிவும் மாநில அளவில் எடுக்கப்பட வேண்டியதிருக்கிறது. எனவே தான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடுமுறை என்பது முதல்வர் வரை சென்ற பின்னரே விடுமுறை அறிவிக்கப்படுகிறதாம். இப்படி நிர்வாக ரீதியாக முடிவுகள் எடுப்பதில் உள்ள பொறுப்புகள் பகிர்வே நேற்று நடந்த குளறுபடிக்கு என்ன காரணம் என்கிறார்கள்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications