Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்க வீட்டிலுள்ள மாணவர்களுக்கு முக்கிய செய்தி.. பள்ளிகள் திறந்த முதல் நாளே.. தமிழ்நாடு அரசின் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.. இதுகுறித்த நடவடிக்கைகளையும் உடனடியாக துவங்கிஉள்ளது மாணவர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை முடிந்து மறுபடியும் பள்ளிகள் ஜுன் மாதத்தில் திறக்கப்படுவது வழக்கம்... தற்போதுதான் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிந்துள்ளன.

School news: Tamil nadu government orders about text book distribution for new academic year 2023 24

அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள், பெற்றோர் மத்தியில் இருந்து வந்தது.

பள்ளிக்கல்வித்துறை: இதற்கு, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை கல்வியாண்டு நாட்காட்டியை சிலநாட்களுக்கு முன்பு வெளியிட்டது.. அதன்படி, ஜுன் மாதம் 1-ந்தேதி (வியாழக்கிழமை) 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து 5-ந்தேதி (திங்கட்கிழமை) 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் ஆரம்பிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், செப்டம்பர் மாதம் 14-ந்தேதியில் இருந்து 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு மற்றும் காலாண்டுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது என்றும், தேர்வு முடிவு அதே மாதம் 27-ந்தேதி வெளியிடப்படும் என்றும், காலாண்டுத்தேர்வு முடிந்து, விடுமுறைக்குப்பிறகு, அக்டோபர் 3-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

விடுமுறை: அதனைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் 11-ந்தேதியில் இருந்து 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு தொகுத்தறி மதிப்பீடு, 2-ம் பருவத்தேர்வு, அரையாண்டுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளதாகவும், அரையாண்டு விடுமுறைக்குப்பிறகு மீண்டும் 2024-ம் ஆண்டு ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, மார்ச் மாதம் 18-ந்தேதி பிளஸ்-2 வகுப்புக்கும், 19-ந்தேதி பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு தொடங்குகிறது.

அவர்களைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 8-ந்தேதி எஸ்எஸ்எல்சி. வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்க இருக்கிறது. மற்ற மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு மற்றும் 3-ம் பருவத்தேர்வு, ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. மொத்த வேலைநாட்கள் அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டின் இறுதி வேலை நாளாக, அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் 30-ந் தேதி என்று தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு அறிவிப்பு: அந்தவகையில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஜுன் ஒன்றாம் தேதியும், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஜுன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.. இந்நிலையில், இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.. இப்போது 12, 11, 10 மற்றும் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது..

தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே பாட நூல்கள், நோட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், மாவட்ட விநியோக மையங்களில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னேற்பாடுகள்: ஆக, ஜுன் 1 மற்றும் ஜுன் 5ம் தேதி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு அன்றைய தினமே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான முன்னேற்பாடுகளையும் கல்வித்துறை அதிகாரிகளும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. அத்துடன், மாணவர்களின் எண்ணிக்கை, தேவைப்படும் பாடப்புத்தகங்களின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் சேகரித்து அதற்கேற்ப நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+