Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் மாணவர்கள் வரவேண்டிய கட்டாயமில்லை - அன்பில் மகேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு பள்ளிகள் திறந்திருக்கும். வர வேண்டியவர்கள் வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிகளை முழுவதுமாக திறக்காததால் விமர்சனங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. அதனால் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது. பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தொடக்க பள்ளி மாணவர்களுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஆரம்ப, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

பெற்றோர்களிடம் ஆலோசனை

பெற்றோர்களிடம் ஆலோசனை

பள்ளிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் ஆலோசனை கேட்கப்பட்டு வருகிறது. இக்கருத்துக்களின் அடிப்படையில் முதல்வர் பள்ளிகளை திறப்பதற்கான நல்ல முடிவினை எடுப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலன் தான் முக்கியம் என்றும், அதனடிப்படையிலேயே முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடுநிலை பள்ளிகள் திறப்பு

நடுநிலை பள்ளிகள் திறப்பு

அடுத்த ஊரடங்கு அறிவிப்பின்போது, தொடக்க பள்ளிகளை திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும் அடுத்தக்கட்ட தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

முதல்வர் அறிவிப்பு

முதல்வர் அறிவிப்பு

1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும், வெள்ளி, சனி, ஞாயிறன்று வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கான தடையை நீக்கக் கோருவது பற்றியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

இதனிடையே தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து நடந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளார்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கு மாணவர்கள் கட்டாயம் வர வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார். அரசு பள்ளிகள் திறந்திருக்கும் என்றும் பள்ளிக்கு வர வேண்டியவர்கள் வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விமர்சனங்கள் வரலாம்

விமர்சனங்கள் வரலாம்

பள்ளிகளை முழுவதுமாக திறக்காததால் விமர்சனங்கள் எழுந்தாலும் பரவாயில்லை என்று கூறியுள்ள அமைச்சர், குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்றார். பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் கூறியுள்ளார்.

பெற்றோர்கள் கோரிக்கை

பெற்றோர்கள் கோரிக்கை

கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளி சென்ற மாணவர்களுக்கு 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளை மீண்டும் மூட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் தனியார் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+