தொடர் மழை.. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Recommended Video
சென்னை: தொடர் மழை காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அதிக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று விடிய விடிய பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வருகின்றன.
தமிழகத்தில் நவம்பர் 30, டிசம்பர் 1, டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. இதன் எதிரொலியாக நேற்று முன் தினம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்டும், நேற்று ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்கள்
இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் படி தொடர் மழை பெய்து வந்ததால் 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை
கடலூர் கல்வி மாவட்டம், சிதம்பரம், வடலூர் பகுதியில் உள்ள கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் அரியலூர், ராமநாதபுரம், பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
நேற்றைய தினம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வந்ததால் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications