Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்யாவின் லூனா 25 தோல்வி மனித சமூகத்திற்கே இழப்பு.. காரணம் இதுதான்! விளக்கமளிக்கும் அறிவியல் உலகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலவின் தென் துருவத்தில் யார் முதலில் ரோவரை இறக்குவது என்கிற போட்டியிலிருந்த ரஷ்யாவின் லூனா 25 எனும் விண்கலம் தோல்வியடைந்த நிலையில், இந்த தோல்வி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான தோல்வி என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மனிதனுக்கும் விண்வெளிக்குமான தொடர்பு கடந்த 1957ம் ஆண்டுதான் தொடங்கியது. ஆனால், மனிதன் குரங்கிலிருந்து பரிணாமமடைந்து நாகரீக சமூகமாக வாழ தொடங்கிய சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விண்வெளிக்கான கற்பனை தொடர்பு தொடங்கிவிட்டது. அந்த காலத்தில் வானத்தில் தெரியும் மாற்றங்களை குகைகளில் ஓவியமாக வரைந்து வைத்தான். இலக்கியங்கள் மூலமாகவும் தனது கற்பனைகளை அவன் வெளிப்படுத்தி வந்தான். ஆனால், இந்த கற்பனைகளுக்கு உயிர் கொடுத்தது சோவியத் யூனியன்தான் (தற்போதைய ரஷ்யா).

Scientists have said that the Russian Luna 25 spacecraft loss in moon is aloss to the entire human race

அதுவரை காமிஸ்களில் வரையப்பட்ட ஓவியங்களையும், கற்பனை கதாபாத்திரங்களையும் பார்த்து வந்த மக்கள், உண்மையிலேயே விண்வெளியில் மனிதர்கள் பறக்கிறார்கள் என்று சொன்னபோது அதை அவர்கள் விசித்திரமாக கேட்டார்கள். அப்படியொரு மகத்தான சாதனையை ரஷ்யா படைத்தது. முதன் முதலில் விண்வெளிக்கு ராக்கெட்டை, செயற்கைக்கோளை, விலங்குகளை, மனிதர்களை குறிப்பாக பெண்களை, நிலவுக்கு விண்கலனை அனுப்பி ரஷ்யா வரலாறு படைத்தது.

இதுமட்டுமல்லாது 80களில், வளர்ந்து வந்த எளிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்களையும் சோவியத் ரஷ்யா தனது சொந்த செலவில் விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. அப்படியாதான் இந்தியாவிலிருந்து இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் ராகேஷ் சர்மாவும் விண்வெளிக்கு சென்றிருந்தார். விண்வெளியில் 7 நாட்கள் தங்கி இந்திய விண்வெளி வரலாற்றில் மகத்தான சாதனை புரிந்தார். மட்டுமல்லாது இந்தியாவுக்கு தேவையான கிரயோஜெனிக் என்ஜின் கொடுத்தும் சோவியத் யூனியன் உதவி செய்தது.

இருப்பினும் 1990ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த நிலையில், ரஷ்யா தனது விண்வெளி ஆராய்ச்சியை கைவிட்டது. அதற்கு முன்னர் வரை விண்வெளி ஆராய்ச்சி உலகின் நம்பர் 1ஆக இருந்த ரஷ்யா கொஞ்சம் கொஞ்சமாக தனது மதிப்பை இழந்தது. இப்படி இருந்த நிலையில் சில காலத்திற்கு பின்னர் மீண்டும் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கியது. அப்படி உருவானதுதான் லூனா 25 எனும் விண்கலம். இந்த விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள ரஷ்யா திட்டமிட்டிருந்தது.

லூனா 25 விண்கலத்தின் ரோவர் நிலவில் ஓராண்டு ஆய்வு நடத்த இருந்தது. இதற்கேற்ப கடந்த 11ம் ஆண்டு ரஷ்யா லூனா 25 விண்கலத்தை விண்ணில் ஏவியது. ஆனால் அதற்கு முன்னரே இந்தியாவின் இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சந்திரயான் விண்கலத்தை ஏவிவிட்டது. சந்திரயான் 3 குறைந்த பொருளாதார செலவில் உருவாக்கப்பட்டதால் அது பூமி மற்றும் நிலவின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக நிலவை நோக்கி நகர்ந்து சென்று வரும் 23ம் தேதி தரையிறங்க திட்டமிடப்பட்டது.

ஆனால் ரஷ்யாவின் லூனா 25 இன்று தரையிறங்கும் வகையில் அதிக பொருட்செலவுடன் நேரடியாக நிலவுக்கே அனுப்பி வைக்கப்பட்டது. இப்படி அனுப்பி வைக்கப்பட்ட லூனா தரையிறங்க ஆயத்தமான நிலையில் எதிர்பாராத விதமாக அதன் பூஸ்டர்கள் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தி கட்டுப்பாட்டை இழந்து நிலவில் மோதியது. இதனால் இந்த திட்டம் தோல்வி என ரஷ்யா அறிவித்தது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷ்யா நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியிருந்த நிலையில் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

பல்வேறு தரப்பினரும் ரஷ்யாவின் லூனா 25 விண்கலத்தையும், இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தையும் போட்டி விண்கலன்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் போட்டிக்காக ரஷ்யா ஒருபோதும் இதற்கு முன்னர் விண்கலன்களை அனுப்பியதில்லை. மட்டுமல்லாது சந்திரயானில் உள்ள கருவிகளைவிட லூனா 25ல் நவீன தொழில்நுட்ப கருவிகள் இருந்தன. உதாரணமாக நிலவில் துளையிட்டு அதன் மூலம் சேகரிக்கப்படும் மண்ணை ஆய்வு செய்யும் அளவுக்கு அதில் கருவிகள் இருந்தன. எனவே திட்டமிட்டபடி லூனா 25 தரையிறங்கியிருந்தால் ஒட்டுமொத்த உலகத்திற்கும் கூடுதல் தகவல்கள் கிடைத்திருக்கும்.

இது அடுத்தடுத்த ஆய்வுகளுக்கு பெரும் உதவியாக இருந்திருக்கும். அதன் அடிப்படையில் பார்த்தால் லூனா 25 தோல்வி என்பது ரஷ்யாவுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும்தான். அதேபோல இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றி பெற்றால், அதன் மூலம் பெறப்படும் தகவல்கள் உலக நாடுகளின் விஞ்ஞானிகளுடன் பகிர்ந்துக்கொள்ளப்படும். அந்த வகையில் இது இந்தியாவுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமான வெற்றியாக பார்க்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+