காலநிலை மாற்றம் விட்ட சாபம்.. இனி ஒரு நாள் கணக்கு 24 மணி நேரம் கிடையாது! விஞ்ஞானிகள் எச்சரிக்கை
சென்னை: கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றத்தின் விளைவுகள் வெளிப்படையாக தெரிய தொடங்கியிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், காலநிலை மாற்றம் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் இனி ஒரு நாள் என்பது 24 மணி நேரத்திற்கும் அதிகமாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு கோடைக்காலத்தில் பிரிட்டன் எதிர்கொண்ட பிரச்னை காலநிலை மாற்றம் குறித்த விவாதங்களை தீவிரமாக்கியது. பிரிட்டன் அடிப்படையில் ஒரு குளிர் பிரதேசம். குளிர் காலங்களில் உறைபனி ஏற்படும். அதிகபட்சமாக 64 டிகிரி ஃபாரன்ஹீட்அளவுக்குதான் வெயில் இருக்கும். ஆனால், 2022ம் ஆண்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவானது. இதனால் பிரிட்டன் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர். இவ்வளவு வெப்பத்தை தங்கள் வாழ்நாளில் இதற்கு முன்னர் பார்த்ததே கிடையாது என்று கூறுகின்றனர்.

காடுகள் தீ பிடித்து எரிந்தன. விலங்குகள் சரணாலயத்தில் உள்ள உயிரினங்கள் வெப்பம் தாங்க முடியாமல் உயிரிழந்தன. பிரிட்டனில் இதற்கு முன்னர் ஹீட் ஸ்டோக் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் 2022ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பலர் இந்த ஹீட் ஸ்டோக்கால் பாதிக்கப்பட்டனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புதான் இது என்று பல்வேறு தரப்பினரும் பேச தொடங்கினர். அதுவரை காலநிலை மாற்றமெல்லம் ஒன்னும் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் கூட இதைபற்றி பேச தொடங்கினர்.
அதே ஆண்டில் பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை பெய்தது. இதில் ஏறத்தாழ 2,000 பேர் வரை உயிரிழந்தனர். அதிகாரப்பூர்வமான உயிரிழப்பு 1,739 என்று சொல்லப்பட்டாலும் உள்ளூர் மக்கள் இதனை ஏற்கவில்லை. மறுபுறம் சுமார் ரூ.32 லட்சம் கோடி வரை பொருள் இழப்பு ஏற்பட்டது. வீடுகள், தொழிற்சாலைகள், கால்நடைகள் என எல்லாம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களும் காலநிலை மாற்றத்தின் எதிரெதிர் விளைவாக பார்க்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக துபாயில் பெய்த கனமழையும் காலநிலை மாற்றத்தின் விளைவு என்று விஞ்ஞானிகள் பேச தொடங்கியுள்ளனர்.
இப்படி இருக்கையில், தற்போது பூமியின் சுழற்சி வேகம் காலநிலை மாற்றத்தால் குறைந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அறிவியல் ஆய்வுகள் பிரசுரிக்கப்படும் 'நேச்சர்' ஆய்விதழில் இது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பூமி வேகமாக வெப்பமடைகிறது எனவும் இதன் காரணமாக வட துருவங்களில் உள்ள பனி வேகமாக உருகுவதால், அது பூமியின் சுழற்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாலே நடனமாடுபவர்களை கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் தங்கள் நடனத்தின்போது இரண்டு கைகளையும் மேலே உயர்த்தும்போது வேகமாக சுழல்வார்கள். அதே, கைகளை கீழே இறக்கும்போது அவர்களின் சுழற்சி வேகம் குறையும். பூமியும் அதே மாதிரிதான். வட துருவத்தில் பனி கட்டியாக இருக்கும்போது மொத்த எடையும் பூமிக்கு மேல் பக்கத்தில் இருக்கிறது. எனவே சுழற்சி சீரானதாக இருக்கிறது.
இந்த பனிக்கட்டிகள் உருகி கடல்களில் நீராக கலக்கும்போது அதன் எடை பூமி முழுவதும் பரவுகிறது. இதனால் பூமியின் சுழற்சி வேகம் பாதிக்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.
பூமியின் சுழற்சி வேகம் குறைவாக இருந்தால் சூரிய வெப்பத்தின் தாக்கம் பூமி மீது நீண்ட நேரத்திற்கு இருக்கும். சுருக்கமாக சொல்வதெனில் பகல் பொழுதுகளும், இரவு பொழுதும் நீளும். இதனால் புறஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், பூமி உயிர்கள் வாழவே தகுதி இல்லாத கிரகமாக மாற வாய்ப்பிருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பூமியில் ஒரு நாள் என்பது 86,400 வினாடிகள். ஆனால் இப்போது இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்பதுதான் விஞ்ஞானிகளின் கவலையாக இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications