ஒகேனக்கல் வனப்பகுதியில் பூர்வகுடி மக்களின் வீடுகளை தகர்த்த வனத்துறை! எஸ்டிபிஐ கண்டனம்
சென்னை: ஒகேனக்கல் வனப்பகுதியில் பூர்வகுடி மக்களின் வீடுகளை வனத்துறையினர் தகர்த்ததற்கு - எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபி கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே, எடத்திட்டு, வேப்பமரத்து கோம்பு ஆகிய வனப்பகுதியில் வசித்துவந்த பூர்வகுடி மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு எனக் கூறி காவல்துறையினர் உதவியுடன் வனத் துறையினர் தகர்த்துள்ளது கண்டனத்திற்குரியது.

ஐந்து தலைமுறைகளாக கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் செய்து அப்பகுதியில் வசித்து வந்த மக்களை, பூர்வகுடி மக்கள் இல்லை எனக்கூறி மிகவும் அராஜகமான முறையில் பெண்கள், குழந்தைகளிடம் நடந்துகொண்டதோடு, அந்த எளிய மக்களின் வீட்டு மேற்கூரைகளை வனத்துறையினர் தகர்த்துள்ளனர். இதனால் வீடுகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாமல் சொந்த இடத்திலேயே அகதிகள் போல் அம்மக்கள் நிற்கவைக்கப்பட்டுள்ளனர்.
மனிதாபிமானம் சிறிதுமின்றி ஏழை எளிய மக்களிடம் இதுபோன்ற அடக்குமுறைகளை கையாளும் வனத்துறை மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பூர்வகுடி மக்களுக்கு அதே இடத்தில் மீண்டும் வீடுகளை கட்டிக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications