Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஷமப்பேச்சு! மணியன் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கணும்! எஸ்.டி.பி.ஐ. வேண்டுகோள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த ஆர்.பி.வி.எஸ். மணியன் பேசிய காணொளியை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என காவல்துறைக்கும், அரசுக்கும் எஸ்.டி.பி.ஐ. வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து எஸ்.டி.பி.ஐ. மநிலத் தலைவர் நெல்லை முபாரக் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

SDPI demand to remove the video of Vishwa Hindu Parishad Manian speech from social media

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த முன்னாள் மாநில நிர்வாகி ஆர்.பி.வி.எஸ். மணியன் பேசும் காணொளி ஒன்றில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய அரசியல் சாசன சிற்பி டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவதூறு செய்ததோடு, மிகவும் மோசமான முறையில் ஒருமையில் விமர்சித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, திருவள்ளுவர் குறித்தும் ஒருமையில் பேசியுள்ளார். அதோடு பட்டியலின சமூகங்கள் குறித்து சாதி ரீதியாகவும் அவர் இழிவாகப் பேசியுள்ளார். ஆன்மிக பேச்சாளர் என்கிற போர்வையில் ஆர்.பி.வி.எஸ். மணியனின் பேசிய இந்த மோசமான காணொளி சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றன. தேசம் போற்றும் அம்பேத்கர் குறித்தும், தமிழர்கள் போற்றும் திருவள்ளுவர் குறித்தும் மிகவும் இழிவாக பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த ஆர்.பி.வி.எஸ். மணியனை பெயரளவுக்கு கைது செய்து விட்டுவிடாமல், அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைக்க வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறேன்.

SDPI demand to remove the video of Vishwa Hindu Parishad Manian speech from social media

மேலும், அவர் பேசிய அந்த காணொளியை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமீபகாலமாக அம்பேத்கர் தொடங்கி, சமூக நீதிக்காக உழைத்திட்ட தலைவர்கள் மற்றும் சமூகங்களை குற்றப்படுத்தியும், அவர்களை இழிவுப்படுத்தும் போக்குகளைக் கொண்டும் தமிழகத்தில் அரசியல் செய்யும் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

பாஜகவின் எச்.ராஜா போன்றவர்கள் தந்தை பெரியார் குறித்து தொடர்ந்து கொச்சையாக இழிவுப்படுத்தி வருகிறார். இத்தகைய போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமே இத்தகைய போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதால், எல்லோருக்கும் பொதுவான சமூகநீதி அரசு, இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+