நபிகள் நாயகம் பற்றி அவதூறு.. தேசதுரோக வழக்கில் கைது செய்யுங்க! எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக்
சென்னை: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகிகளை தேசதுரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ மாநிக தலைவர் நெல்லை முபாரக் வலியுறித்தி இருக்கிறார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்களால், தங்கள் உயிரினும் மேலாக பெரிதும் மதிக்கும் இறைத்தூதர் முகமது நபி (ஸல்) குறித்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரின் இழிவான மற்றும் அருவருப்பான பேச்சுக்கள் கண்டிக்கத்தக்கது.
இந்த வெறுப்பு பேச்சு காரணமாக ஏற்பட்ட கொந்தளிப்பால் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. பாஜக நிர்வாகிகளின் செயலால் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற இழிநிலைக்கு சங்பரிவார பாசிசத்தின் வெறுப்பு நடவடிக்கை நாட்டை கொண்டு சென்றுள்ளது.

தேசதுரோகம்
உலக நாடுகளின் கடுமையான கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாகவே நுபுர் ஷர்மா மற்றும் டெல்லி பாஜக தலைவர் நவீன் ஜிண்டாலை பாஜக கட்சியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளதே தவிர, அவர்களின் வெறுப்பு பேச்சுக்காக மேற்கொள்ளப்பட்ட உரிய நடவடிக்கை அல்ல. சர்வதேச சமூகத்தின் முன் இந்தியாவை இழிவுபடுத்திய பாஜக நிர்வாகிகளின் செயல் தேசத்துரோகமாகும். ஆகவே பாஜக நிர்வாகிகள் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

சிறைவாசிகள் விடுதலை
உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 6 தமிழர்களின் விடுதலைக்கான நடவடிக்கையையும், தமிழக சிறைகளில் உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை நடவடிக்கையையும் தமிழக அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். பேரறிவாளன் வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டும், அமைச்சரவை தீர்மானத்தையும் கருத்தில் கொண்டும் தான் அவருக்கு உச்சநீதிமன்றம் விடுதலை வழங்கி உத்தரவிட்டது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, தமிழக சிறைகளில் நீண்ட நாள் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுள் சிறைக் கைதிகளுக்கும் ஜாமீன் வழங்குவதோடு, அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய, கமிஷன்களை அமைப்பதை தாண்டி, தமிழக அரசு உடனடியாக அமைச்சரவை தீர்மானத்தை இயற்றவும் முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் நடவடிக்கையை, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் உதவியை கொண்டு முடக்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகின்றது. மாநில அரசு இயற்றிய தமிழக மக்கள் நலன் சார்ந்த 21 மசோதாக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பது ஆளுநரின் தமிழர் விரோத போக்கை வெளிக்காட்டுகிறது. சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் இயற்றப்பட்ட மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், மசோதாக்களை எதிர்க்கும் பாஜகவின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு ஆளுநர் செவிசாய்ப்பது அரசியல் அமைப்புக்கு முற்றிலும் எதிரானது.

ஆளுநரை சந்திப்பது மட்டும் போதாது
தமிழக முதல்வர் இதுதொடர்பாக ஆளுநரை சந்தித்து பலமுறை முறையிட்டும், ஆளுநர் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. ஆகவே, ஆளுநரை சந்தித்து வலியுறுத்தும் போக்கை தமிழக அரசு கைவிட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். ஆளுநரின் நடவடிக்கையால் தமிழத்தின் நலன் பாதிக்கப்படுவதை கருத்தில்கொண்டு, தமிழகத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகளை நோக்கி தமிழக அரசு பயணிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, தமிழக அரசு அனைத்து விவகாரங்களிலும் இன்னும் வெளிப்படையான நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

PFI வங்கி கணக்குகள்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் ரிஹாப் இந்தியா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளை முடக்கிய அமலாக்கத்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது. வெளிப்படையான பரிவர்த்தனை மூலம் சட்டப்பூர்வமாக இயக்கப்படும் வங்கிக் கணக்குகளை முடக்குவது என்பது கேலிக்கூத்தானது.
தங்களுக்கு எதிரான அரசியல் எதிரிகளையும், தங்களின் கருத்துக்களுக்கு உடன்படாதவர்களையும், தங்களது சித்தாந்ததுக்கு எதிராக எதிர்ப்புக்குரல் எழுப்புவோரையும் பழிவாங்குவது என்பது பாசிசத்தின் வழக்கமான நடைமுறையாகும். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தொண்டு மற்றும் சமூகநலன் சார்ந்த நிறுவனங்களை பழிவாங்கும் நோக்கில், பயனற்ற பல ரெய்டுகளை தனது கைப்பாவையான அமலாக்கத்துறை மூலம் ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டுள்ளது.

போலி புகார்
அதன் ஒருபகுதியாக, இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் இதர விளிம்புநிலை மக்களை ஆற்றல்படுத்துவதற்கும், அவர்களின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக ரீதியான முன்னேற்றத்திற்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளுக்கும், மதவாத சங்பரிவார பாசிசத்திற்கு எதிராக ஜனநாயக முறையில் களமாடிவரும் சமூக அமைப்பான பாப்புலர் ஃப்ரண்டை ஒன்றிய அரசு குறிவைத்துள்ளது. எனினும் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் நடந்த சோதனையில் அமலாக்கத்துறை சட்டவிரோதமான பரிவர்த்தனைகள் தொடர்பான எந்த ஆவணத்தையும் கைப்பற்றவில்லை. போலியான குற்றச்சாட்டின் பேரில் பாப்புலர் ஃப்ரண்டை தொடர்ந்து குறிவைக்கும் அமலாக்கத்துறையின் இத்தகை செயல் ஆட்சியாளர்களின் அடாவடித்தனத்தை வெளிப்படுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ். பண பரிவர்த்தனைகள்
அமலாக்கத்துறையைப் பொறுத்தவரை இதுவரை மத்திய மற்றும் மாநில பா.ஜ.க அரசுகளின் மீதான பொருளாதார குற்றச்சாட்டுக்கள் குறித்து எந்த வழக்கையுமே விசாரித்தத்தில்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் நடந்த ஊழல், தேர்தல் பத்திரங்கள், பி.எம்.கேர்ஸ் நிதி முறைகேடு முதலான குற்றச்சாட்டுக்கள் குறித்து எவ்வித நடவடிக்கையையும் அமலாக்கத்துறை மேற்கொண்டதில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிர் கருத்தாளர்களையும், அரசியல் எதிரிகளையும் தொடர்ந்து வேட்டையாடுவதையே தனது நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்துத்துவ சாமியார்களின் பணப்பரிவர்த்தனைகள் குறித்தோ, ஆர்.எஸ்.எஸ்ஸின் பண பரிவர்த்தனைகள் குறித்தோ இதுவரை அமலாக்கத்துறை ஒரு நோட்டீஸ் கூட அனுப்பியதில்லை.

அச்சுறுத்தல்
அமலாக்கத்துறை மூலமான ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட அமைப்பை மட்டும் தனிமைப்படுத்தும் முயற்சி அல்ல. பாப்புலர் ஃப்ரண்டை குறிவைப்பதன் மூலம், அவர்களின் இறுதி நோக்கம் என்பது ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகத்திற்கு சேவை புரியும் உண்மையான, நேர்மையான அனைத்து அமைப்புகளையும், நிறுவனங்களையும், தலைவர்களையும் அச்சுறுத்தி அவர்களை பின்வாங்கச் செய்வதாகும். ஆகவே ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டிப்பதோடு, நீதிக்கான குரலை உயர்த்துவதில் என்றென்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி முன்னிலை வகிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருவது தொடர் கதையாகி வருகின்றது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சிறுவர்கள் அடிமையாகுவதைப் போன்று, பெரியவர்களும் எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகித் தொடர் தோல்விகளைச் சந்திக்கும் பலர் தற்கொலை செய்துள்ளனர். மட்டுமின்றி தங்கள் குடும்பத்தினரையும் கொலை செய்துவிட்டு தாங்களும் தற்கொலை செய்த நிகழ்வுகளும் கடந்த ஓராண்டில் அரங்கேறியுள்ளன. நேற்று முன்தினம் சென்னை மணலியை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு தாயான இளம்பெண் ஒருவர் ரூ.20 லட்சம் வரை ரம்மி விளையாட்டில் இழந்த நிலையில் தற்கொலை செய்துள்ளார். இந்த தற்கொலை நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.

விரைந்து சட்டம் இயற்றுக
கடந்த அதிமுக அரசு ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்து சட்டம் இயற்றியது. ஆனால், சட்டத்தை நீக்கக் கோரி ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் விளையாட்டுகள் மீதான தடையை ரத்து செய்தது. அதேவேளையில் புதிய சட்டம் கொண்டுவரத் தமிழ்நாடு அரசுக்குத் தடை இல்லை எனவும் தெரிவித்திருந்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாலும், புதிய சட்டத்தை விரைவாக இயற்றி, அப்பாவி மக்களின் பொருளாதாரத்தையும், உயிர்களையும் பறிக்கும் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கு எதிராக வலுவான சட்டம் இயற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக டிஜிபி அவர்கள் சுட்டிக்காட்டியது போல, சினிமா நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து, யாரும் இந்த மோசடியில் சிக்கி தங்களின் பொருளாதாரம், பொன்னான உயிர் மற்றும் குடும்பங்களை இழக்க வேண்டாம் எனவும் மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கருமுட்டை விவகாரம்
ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரின் கருமுட்டையை, பணத்துக்காக அவருடைய பெற்றோர் உள்ளிட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் 3 ஆண்டுகளாக விற்பனை செய்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சம்பவத்தில் தொடர்புடைய பெற்றோர்கள், புரோக்கர்கள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி தாமாக முன்வந்து அளித்த புகார் மூலம் தான் இத்தகைய சட்டவிரோத சம்பவம் வெளியாகியுள்ளதே தவிர, அதிகாரிகளின் கண்காணிப்பு மற்றும் விசாரணையால் அல்ல. இந்த விவகாரத்தில் உள்ளூர் மருத்துவமனைகள் மட்டுமின்றி வெளிமாநில மருத்துவமனைகளும் சம்மந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
21 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடம் அவர்களின் அனுமதியுடன் மட்டும் தான் கருமுட்டையை எடுக்க வேண்டும் என்கிற விதி இருக்கும் நிலையில், ஏழ்மையை பயன்படுத்தி அப்பாவி சிறுமிகள் மற்றும் பெண்களிடத்தில் கருமுட்டைகளை சட்டவிரோத திருடி விற்பனை செய்யும் சட்டவிரோத கும்பல்கள், தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை தேவை
இந்த விவகாரம் ஏதோ இந்த சிறுமிக்கு மட்டும் நிகழ்ந்த ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. அது ஒரு மிகப்பெரும் நெட்வொர்க் அடிப்படையில் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. ஆகவே தமிழக சுகாதாரத்துறையும், காவல்துறையும் விசாரணையை தீவிரப்படுத்தி சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள், தொடர்புடைய புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட ஈரோடு சிறுமிக்கு உரிய நீதி கிடைக்கச் செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications