அதிகாலையில் வந்த ஷாக் தகவல்! மனதை கல்லாக்கி கொண்டு கட்சி மேடையேறிய நெல்லை முபாரக்! பின்னணி என்ன?
சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கின் தாயார் ஷெரிஃபா பீவி காலமானார்.
அம்மா காலமான தகவல் தன்னை உலுக்கினாலும் கூட மனதிற்குள் சோகத்தை புதைத்துக் கொண்டு, ஆளுநருக்கு எதிரான முற்றுகைப் பேரணியில் பங்கெடுத்து விட்டுத் தான் ஊருக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார் நெல்லை முபாரக்.
பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு இது போன்ற திடமான நெஞ்சுரம் வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

எஸ்.டி.பி.ஐ. போராட்டம்
தமிழக ஆளுநர் ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. தலைமையில் சென்னையில் இன்று பிரம்மாண்ட பேரணியும் முற்றுகைப் போரட்டமும் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கிற்கு பாளையங்கோட்டையில் இருந்து அதிகாலையில் வந்த அலைபேசி தகவல் அவரை திடுக்கிட வைத்திருக்கிறது. அதாவது நெல்லை முபாரக்கின் தாயார் ஷெரிஃபா பீவி காலமான செய்தி அது.

திட்டமிட்டபடி பேரணி
இந்த தகவல் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் மத்தியில் பரவியது. இதையடுத்து இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்தை ஒத்தி வைக்கலாமா என சிலர் ஆலோசித்துள்ளனர். ஆனால் அதனை திடமாக மறுத்த நெல்லை முபாரக், என் சோகம் என்னோடு தான் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, திட்டமிட்டப்படி ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை நடத்தியதோடு அதில் முதல் ஆளாக உரையாற்றிவிட்டு அங்கிருந்து பாளையங்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

இரங்கல் -ஆறுதல்
இன்று மாலை 5.30 மணிக்கு பாளையங்கோட்டையில் நெல்லை முபாரக்கின் தாயார் அடக்கம் செய்யப்படுகிறார். இதனிடையே நெல்லை முபாரக்கின் தாயார் மறைவுச் செய்தியறிந்து டிடிவி தினகரன் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் வரலாறு
கருணாநிதியின் தந்தை முத்துவேல் மறைந்த போது அது குறித்த தகவல் துண்டுச் சீட்டு மூலம் கிடைக்கப்பெற்றும், திமுக மாநாட்டில் தாம் ஆற்றிக் கொண்டிருந்த சொற்பொழிவை முழுமையாக முடித்து கடமையை நிறைவு செய்த பின்னரே அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார் என்பது கடந்த கால அரசியல் வரலாறு. அதேபோன்று ஒரு நிகழ்வு தான் இன்றைய தினம் நடந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications