ஹய்யோ.. ஈரக்குலையே நடுங்கி போச்சே.. அதுவும் பெண்ணின் காதுக்குள்ளேயே.. அலறிய டாக்டர்.. பாருங்களேன்

பெண்ணின் காதுக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாம்புவை காட்டில் பார்த்திருப்போம்.. ரோட்டில் பார்த்திருப்போம்.. வீட்டில் பார்த்திருப்போம்.. ஆனால், ஒரு பெண்ணின் காதுக்குள் பார்த்திருக்கீங்களா?

இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் உள்ளன.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதுமட்டுமின்றி பாம்புகளின் வீடியோக்கள் எந்நேரமும் வைரலாகி வருகிறது.. பாம்பை கண்டு அனைவரும் பயந்தாலும் வீடியோவாக இருந்தால் ஆர்வத்துடன் பார்க்க முன்வருகின்றனர்.

 8 அங்குலம் நீளம்

8 அங்குலம் நீளம்

அந்தவகையில் சில நாட்களுக்கு முன்புகூட ஒரு வீடியோ வைரலானது... அந்த வீட்டின் வாசலில் கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.. சுமார் 8 அங்குல நீளம் இருக்கும்.. அந்த நேரத்தில் தாயும் குழந்தையும் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். வாசலில் இருந்த பாம்பை பார்க்காமல் சிறுவன் அதன் மீது பாய்ந்தான்... சிறுவனை பார்த்த பாம்பு ஆத்திரமடைந்து குழந்தையை தீண்ட முயன்றது.. இதை பார்த்து பயந்து போன குழந்தையின் தாய் மின்னல் வேகத்தில் ஓடி வந்து குழந்தையை தூக்கி கொண்டு ஓடிவிட்டார்..

 ஒரே செகண்ட்

ஒரே செகண்ட்

ஒரு நொடி தாமதித்தாலும் பாம்பு சிறுவனை கடித்திருக்கும்.. இந்த வீடியோவை பார்த்து பலரும் உறைந்து போயினர்.. அந்த தாய்க்கு பாராட்டையும் நெட்டிசன்கள் தெரிவித்தனர். அதேசமயம், பாம்பு யாரையுமே தீண்டாது.. நாம் அதற்கு தொந்தரவு தரும் பட்சத்தில் மட்டுமே, நம்மை தீண்டுவதுபோல வரும்.. அந்தவகையில், சிறுவன் மிதித்துவிடுவானோ என்றுதான், சீறியிருக்குமே தவிர, தீண்ட வரவில்லை என்று பலரும் கருத்து சொன்னார்கள்..

 காதுக்குள் SNAKE

காதுக்குள் SNAKE

இந்நிலையில், இப்போது இன்னொரு பாம்பு வீடியோ இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.. இந்த சம்பவம் எப்போது எங்கே நடைபெற்றது என்று தெரியவில்லை.. ஆனாலும் வீடியோவை பார்த்தாலே ஈரக்குலை நடுங்குகிறது.. ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு உள்ளது.. வழக்கமாக சிறு குழந்தைகள், கல்லையோ, அல்லது நாணயம் போன்ற வேறு ஏதாவது சிறிய பொருளையோ விழுங்கி விடுவார்கள்.. அல்லது காதில் தெரியாமல் போட்டுக்கொள்வார்கள்.

 சீறும் பாம்பு

சீறும் பாம்பு

ஆனால், ஒரு பெண்ணின் காதுக்குள் எப்படி பாம்பு என்பதுதான் விந்தையாக உள்ளது.. இந்த வீடியோவை நம்பவும் முடியவில்லை.. நம்பாலும் இருக்கவும் முடியவில்லை.. காரணம், அந்த பெண் பாம்பு காதுக்குள் நுழைந்ததுமே, டாக்டரிடம் சென்றுள்ளார்.. டாக்டரும், ஒரு சிறிய கொரடு கொண்டு வந்து, அந்த பாம்பை மெல்ல வெளியே எடுக்கிறார்.. வீடியோவில் இது அப்பட்டமாக பதிவாகி உள்ளது.. காதுக்குள் பாம்பு போகும் வரை அந்த பெண்ணுக்கு அது எப்படி தெரியாமல் போனது? என்ற கேள்வியை இணையவாசிகள் கேட்டு வருகிறார்கள் என்றாலும், மரண பீதியை இந்த வீடியோ ஏற்படுத்தி வருகிறது என்பது மட்டும் நிச்சயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+