Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மிட்நைட்டில்".. டாக்டர் சரவணன் இருக்காரே.. "ஸ்கெட்ச்" இதுதானாமே.. குழம்பும் திமுக.. கவனிக்கும் பாஜக

டாக்டர் சரவணன் திமுகவுக்கு வந்தால், அவருக்கு என்ன பதவி தரப்படும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாக்டர் சரவணன், பாஜகவில் இருந்து விலகிய நிலையில், திமுகவில் அவர் இணைவது குறித்த சலசலப்புகள் இன்னும் இணையத்தில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.. என்னவாம்?

Recommended Video

    பாஜகவில் இருந்து விலகிவிட்டேன் - மதுரை சரவணன்

    பிடிஆர் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்தையடுத்து, அடுத்தடுத்த சலசலப்புகள் மதுரையில் நிகழ்ந்தன.. காலையில் பிடிஆர் மீது பாய்ந்த டாக்டர் சரவணன், அடுத்த 12 மணி நேரத்திலேயே பிடிஆரை இரவோடு இரவாக சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளார்..

    நடந்த சம்பவத்தினால் தூக்கமே வராமல் தவித்ததாகவும், அதனால் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்யவே பிடிஆரிடம் வந்ததாகவும் கூறி, பாஜகவில் இருந்து விலகுவதாக, அப்போது செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

    ராதாரவி

    ராதாரவி

    பொதுவாக, ஒருவர் அரசியலில் கட்சி மாறுவது இயல்பு.. அதற்கு ராதாரவி முதல் எஸ்வி சேகர், செந்தில்பாலாஜி என எத்தனையோ பேர் நிகழ்கால அரசியலில் உதாரணங்களாக உள்ளனர். ஆனால், ஒருவர் ஒரே கட்சிக்கு 3 முறை தாவி, தாவி சென்றதுதான், சரவணன் விஷயத்தில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.. அதேசமயம், சரவணனின், கட்சி விலகல் திட்டமிட்ட ஒன்று என்றும் பாஜகவினர் சொல்லி வருகிறார்கள்.. திமுகவில் தான் இணையவேண்டும் என்பதை நீண்ட நாள் முன்பேமுடிவு எடுத்துவிட்டதாகவும், அதனை இந்த நேரத்தில் சரியாக பயன்படுத்திக்கொண்டதாகவும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.

    அசைன்மென்ட்

    அசைன்மென்ட்

    பாஜக சொல்வது ஓரளவு உண்மை என்றாலும், இதற்கான முன்னெடுப்பை எடுத்தது, டாக்டர் சரவணன் கிடையாதாம்.. திமுக தரப்புதானாம்.. இதற்கான அசைன்மென்ட் மதுரையை சேர்ந்த திமுக புள்ளி ஒருவரிடமும் தரப்பட்டிருந்ததாம்.. அவரும் சரவணனிடம் இதற்கான பேச்சை ஆரம்பித்திருக்கிறார்.. எடுத்த எடுப்பிலேயே அப்போது சரவணன் கொக்கி போட்டது, "திமுகவுக்கு வந்தால், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி"க்கு தானாம்.. ஏற்கனவே மதுரையில் திமுகவின் பல சீனியர்கள் உள்ளபோது, அவர்களுக்கே முக்கிய பதவிகளை ஒதுக்கி தராத நிலையில், சரவணனுக்கு எப்படி இவ்வளவு பெரிய பதவியை தருவது என்று யோசித்ததாம் திமுக மேலிடம்..

     டோஸ்

    டோஸ்

    திமுகவிலேயே இருந்தால்கூட பரவாயில்லை.. தேர்தலில் சீட்டு தரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, மாற்று கட்சிக்கு அதுவும் முற்றிலும் சித்தாந்த மாறுபாடுகள் நிறைந்த பாஜகவுக்கு சென்றுவிட்ட சரவணனுக்கு எப்படி இந்த பதவியை தருவது? அப்படியே தந்தாலும் மதுரை திமுகவுக்குள் மீண்டும் அதிருப்திகள் வெடிக்குமே? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.. அதனாலேயே சரியான பதில் சொல்லாமல், இந்த விஷயம் இழுபறியிலேயே இருந்ததாம்.. இப்படிப்பட்ட சூழலில்தான், யாருமே எதிர்பாராத, பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் நடந்துவிட்டது.

    மிட்நைட்

    மிட்நைட்

    இதைதான் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுவிட்டதாம் மதுரை திமுக.. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு, திமுகவில் இணைந்துவிடுங்கள், இல்லாவிட்டால் நீங்களே நினைத்தாலும் திமுகவில் இணைய முடியாது என்று கூறியுள்ளனர்.. அதற்கு பிறகே, இரவோடு இரவாக பிடிஆரின் வீட்டுக்கு சரவணன் ஓடியதாக கூறப்படுகிறது.. ஆனால், இப்போது சிக்கல் என்னவென்றால், மதுரை திமுகவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், குறிப்பாக பிடிஆருக்கு எதிரான விஷயங்களை திரட்டி தரும்படி சரவணனிடம், பாஜக தரப்பு கேட்டிருந்ததாம்..

     பிடி + பிடிஆர்

    பிடி + பிடிஆர்

    எனவே, பிடிஆருக்கு எதிரான சில விஷயங்களை தயார் செய்து, சரவணனிடம், மதுரை பாஜகவின் ஒரு குரூப் தந்திருக்கிறது.. ஆனால், சரவணன் திடீரென திமுக பக்கம் போக உள்ள நிலையில், அந்த குரூப்புக்கு கிலி ஏற்பட்டுள்ளது.. பாஜகவின் ஒரு பிடி சரவணனிடம் இருந்தாலும், திமுகவில் அவர் கேட்ட பதவி தரப்படுமா? என்பது இன்னும் தெரியவில்லை. அப்படியே தந்தாலும், மதுரை திமுகவின் அதிருப்திகளையும், சலசலப்புகளையும் மேலிடம் சமாளிக்குமா? தெரியவில்லை.

     பிடிஆர் = போஸ்டிங்

    பிடிஆர் = போஸ்டிங்

    காரணம், திமுகவில் மாவட்ட செயலாளர்களே, சரவணனுக்கு எதிராக உள்ளதாக ஒரு பேச்சு உள்ளது.. குறிப்பாக தற்போதைய மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி, கோ.தளபதி, பொன்முத்து ராமலிங்கம், மணிமாறன் போன்றோர், சரவணனை மீது ஏற்கனவே அதிருப்தியில் உள்ளதால், கட்சியில் அவரை சேர்த்துக்கொள்வதற்கோ அல்லது முக்கிய பதவி தருவதற்கோ, தடையாக இருப்பார்கள் என்கிறார்கள்.. பிடிஆர் இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளதால், கட்சியில் இணைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தாலும், அவர் கேட்ட போஸ்டிங் கிடைக்குமா? என்பதுதான் டவுட்டாக இருக்கிறதாம்.

    சந்தர்ப்பவாதம்

    சந்தர்ப்பவாதம்

    டாக்டர் சரவணனை பொறுத்தவரை, தொகுதி மக்களிடம் இயல்பாகவே, நல்ல பெயர் பெற்றவர்.. சொந்த காசில் நிறைய நல்ல விஷயங்களை செய்து தந்தவர்.. அதிலும், கொரோனா காலத்தில் சரவணன் , தன் தொகுதி மக்களுக்காக செய்த நற்காரியங்களை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்கவும் முடியாது. அவரது மருத்துவமனை மூலம் பல ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை செய்துள்ளார்.. ஆனால், அதேசமயத்தில், பதவிக்காகவும், சீட் தரவில்லை என்பதற்காகவும், இத்தனை கட்சிகளுக்கு ஒருவர் மாறி மாறி சென்று கொண்டிருக்கும் "சந்தர்ப்பவாத அரசியலையும், துரோக அரசியலையும்", மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.. அடுத்து என்ன நடக்க போகிறது.. பார்ப்போம்..!

    சித்தாந்தம்

    சித்தாந்தம்

    இதனிடையே, மதுரை பாஜகவில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.. டாக்டர் சரவணன் விட்டுச்சென்ற இடத்தை பிடிக்க, கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாம்.. வரப்போகும் எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பேயே தயாராகிவிட்டது.. அந்தவகையில், இதே மதுரையில்தான், மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தியிருந்தார்.. அந்தவகையில், மதுரை பாஜக மிகுந்த முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், சரவணன் போஸ்டிங்குக்கு போட்டா போட்டி எழுந்துள்ளது.. இந்த முறையாவது, கட்சிக்காக உழைப்பவர்களுக்கும், கட்சியின் சித்தாந்தங்களில் உறுதியாக இருப்பவர்கள் யாரென்பதை பார்த்து பதவியை தர வேண்டும் என்றும், பாதியில் வந்தவர்களுக்கு எல்லாம் போஸ்டிங் தந்தால் இப்படித்தான் அசிங்கப்படுத்திவிடுவார்கள் என்றும் அடிமட்ட பாஜகவினர் புலம்ப ஆரம்பித்து விட்டார்களாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+