15 ஆண்டுகளுக்கு பின்! தீரன் "பவாரியா" கும்பல் தலைவனை சென்னையில் போலீஸ் பிடித்தது எப்படி? செம ஆபரேஷன்
சென்னை: சேலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை நேற்று தனிப்படை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர். அந்த முக்கிய குற்றவாளி வேறு யாரும் இல்லை.. தீரன் படத்தில் நாம் பார்த்த அதே பவாரியா கும்பலின் உண்மையான தலைவன்தான்.. அந்த கும்பலின் தலைவனை போலீஸ் 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிடித்துள்ளது.. இத்தனை வருடம் கழித்து அவரை கண்டுபிடித்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் திரைக்கு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த "தீரன் அதிகாரம் எண் ஒன்று" திரைப்படத்தின் உண்மை சம்பவம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த படம் தமிழ்நாட்டில் 2000ம் ஆண்டுகளில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பவாரியா கொள்ளை கும்பல் பற்றியது. அந்த கும்பலை எப்படி போலீஸ் பிடித்தது என்பதுதான் கதை. இது நிஜ சம்பவம் ஆகும்.. 2000ம் ஆண்டுகளில் அப்படி என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பவாரியா கொலை
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன். இவரது வீடு சீலநாயக்கன்பட்டி அருகே உள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அதிகாலை அவரது வீட்டிற்குள் கொடூர கொள்ளை கும்பல் ஒன்று புகுந்தது. காவளாளி கோபாலை கொன்று விட்டு, வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் தாளமுத்து நடராஜனை துப்பாக்கியால் அடித்து கொலை செய்தது. அந்த வீட்டிலேயே ரத்தம் சொட்ட சொட்ட தாளமுத்து நடராசன் கொடூரமாக கொல்லப்பட்டார்.

வழக்கு
பின்னர் வீட்டில் இருந்த பல கோடி மதிப்பு கொண்ட 200 பவுன் தங்க நகைள், வெள்ளிகள், பண கட்டுகளை கொள்ளையடித்துச்சென்றது. இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். லாரி கேங் என்று அழைக்கப்படும் "பவாரியா" என்ற கொள்ளை கும்பல் இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இக்கும்பல் 2005 ஆம் ஆண்டு திருவள்ளூர் பெரியபாளையம் முன்னாள் அமைச்சர் சுதர்சனம் உட்பட தமிழகத்தில் 25 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு கொண்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

விசாரணை
இதையடுத்து போலீஸ் அதிகாரி ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் இவர்களை தேட களத்தில் இறங்கியது. கைரேகை அடிப்படையில் இவர்களை தேடும் பணி தொடங்கியது. இந்த தேடுதல் வேட்டை நீண்ட நாட்களுக்கு நடந்தது. ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நாட்களில் அவர்களை சுற்றிவளைத்த காவல்துறையினர் ஒருவரை சுட்டுக் கொன்று மற்றவர்களை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர்.

ஓம் பிரகாஷ்
பவாரியா கும்பல் தலைவனான ஓம்பிரகாஷ், அசோக், ராகேஷ் குண்டு, ஜெயில்தார்சிங், பப்லு, பீனாதேவி, சந்து ஆகிய 7 பேரை கைது செய்தனர். இதேபோன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் "பவாரியா" கும்பலின் தலைவன் ஓம் பிரகாஷ், அசோக், ராகேஷ்குண்டு, ஜெயில்தார்சிங், ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் ஓம்பிரகாஷ் சிறையில் இருக்க முடியாமல் அங்கேயே தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே வந்தனர்
இதில் ஓம்பிரகாஷ் மருமகன் ஜெயில்தார்சிங், மனைவி பீனாதேவி, சகோதரி சந்து மற்றும் பப்லு ஆகியோர் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாகி விட்டனர். இவர்களுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்டும் பிறப்பித்திருந்தது. இந்த கொலை சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வழக்கை விரைந்து முடிக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.

சர்ச் ஆப்ரேஷன்
இதையடுத்து இவர்களை கண்டுபிடிக்க சர்ச் ஆப்ரேஷன் போடப்பட்டது. இதையடுத்து துணை ஆணையாளர் மோகன்ராஜ் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் சந்திரகலா ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர முயற்சியில் இறங்கினர். இந்த நிலையில் ஓம்பிரகாசின் மருமகன் ஜெயில்தார்சிங் சென்னையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சேலம் தனிப்படை காவல்துறையினர் சென்னை விரைந்தனர்.

இன்பார்மர்கள்
இன்பார்மர்கள் மூலம் இந்த ரகசிய தகவல் போலீசுக்கு கிடைத்து இருக்கிறது. தேனாம்பேட்டையில் வைத்து ஜெயில்தார்சிங்கை கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். அவரிடம் துணை ஆணையாளர் மோகன்ராஜ் விசாரணை நடத்தினார். பின்னர் சேலம் 4 ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கு வரும் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த 15 வருடம் பவாரியா கும்பலின் தலைவனான ஜெயில்தார்சிங் என்ன செய்து கொண்டு இருந்தான் என்று போலீசார் விசாரிக்க உள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications