"சர்ப்ரைஸ்".. ஸ்டாலின் வீட்டுக்குள் தமிழிசை.. மோடி பற்றி சொன்ன தயாளு அம்மாள்.. கோபாலபுரத்தில் என்ன?
கோபாலபுரத்தில் தயாளு அம்மாள் உடல்நலம் விசாரித்தார் தமிழிசை சவுந்தராஜன்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்குள் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன்.. இதுதான் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.. என்ன காரணம்?
Recommended Video
முதல்வர் முக ஸ்டாலினும் சரி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் சரி, தங்களது சின்ன வயதில் இருந்தே தமிழக அரசியல் தலைவர்களை நேரில் பார்த்து பார்த்து வளர்ந்தவர்கள்.. இருவருமே பாரம்பரியமான பின்னணி கொண்டவர்கள்..
பெற்றோர்களின் சீரிய வளர்ப்பு, நாகரீகம் குறையாமல் பேசும் தன்மை, வார்த்தை கட்டுப்பாடுகள், எதையும் பொறுமையுடன் அணுகும் பின்னணி.. இதுதான் இவர்கள் இருவரின் பிளஸ் பாயிண்ட்டாக இருந்து வருகிறது.

"கலைஞர்"
கருணாநிதி மறைவுக்கு பிறகு, ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்ற போது, இங்கு ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தராஜனுடன் நிறைய கருத்து மோதல்கள் ஏற்பட்டது.. அப்போது ஸ்டாலினை யார் யாரோ அரசியல் ரீதியாக விமர்சித்தார்கள்.. அதிலும் அப்போதைய அதிமுக ஆட்சியில் வரைமுறை இல்லாமல் அநாகரீகமாக விமர்சித்த நிகழ்வுகளும் நடந்தது.. அவ்வளவு ஏன்? தான் ஒரு அமைச்சர் என்பதையே மறந்து ராஜேந்திர பாலாஜி போன்றோர் பேசிய அநாகரீகத்தை இந்த நாடே பார்த்து அதிர்ந்தது.

ட்வீட் + அசால்ட்
ஆனால், எதிர்க்கட்சியில் இருந்தாலும், அரசியல் நாகரீகத்துடன், எல்லைமீறாமல் ஸ்டாலினை விமர்சித்து வருபவர்தான் தமிழிசை.. யார் தன்னை தாக்கி பேசினாலும் அவர்களின் பேச்சை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாத ஸ்டாலின், தமிழிசை ஒரு ட்வீட் போட்டு அட்டாக் செய்தால், அதற்கு ஓடோடி சென்று மதிப்பளித்து பதில் ட்வீட் போடுவார். அதுபோலவேதான், தமிழிசையும்.. எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில், ஒரு நல்ல விஷயம் என்றால், பிறந்த நாள், விழா என்றால், மாறி மாறி போனை போட்டு பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து கொள்பவர்களும்கூட.

சகோதரர்
தங்கள் கட்சிக்கு ஒவ்வாத விஷயங்களே என்றாலும், அதை பாஜக கண்டிக்க நேரும்போதுகூட, "சகோதரர் ஸ்டாலின், இந்த முடிவை பரிசீலிப்பார் என நம்புகிறேன்" என்று துல்லியமாகவும், அதேசமயம் தன் பாசத்தை இழக்காமலும் வேண்டுகோள் விடுவது தமிழிசையின் ஆல் டைம் பழக்கம்.. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சர்ப்ரைஸாக சென்றுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.. இதுதான் பாஜக - திமுகவினருக்கு இன்ப அதிர்ச்சியை தந்து வருகிறது.

கோபாலபுரம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாவை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார்... கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கோயிலுக்கு சென்ற அவர் அங்கு முதல்வர் ஸ்டாலினின் சகோதரியை சந்தித்து கோபாலபுரம் வீட்டுக்கும் சென்று வந்துள்ளார். அப்போது, தயாளு அம்மாளிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

தயாளு அம்மாள்
இது குறித்து தமிழிசை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றி, "கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயில் சென்றேன். திரும்பும்போது தமிழக முதல்வர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரி திருமதி.தமிழ்ச்செல்வி அவர்களை சந்தித்தேன்.மரியாதை நிமித்தமாக இல்லத்திற்கு சென்று திருமதி.தயாளு அம்மாளை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். இதற்கு முன்பு மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுடன் கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க இதே இல்லத்திற்கு நான் வந்த நினைவு நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்." என்று தமிழிசை பதிவிட்டுள்ளார்.

தயாளு அம்மாள்
4 வருடங்களுக்கு முன்பு மோடி இங்கு வந்து சென்றதை நினைவுகூர்கிறார் என்றால், அரசியலையும் கடந்து, பிரதமரின் மனிதாபிமானம் மற்றும் தயாளு அம்மாளின் நினைவாற்றல் சிறந்த முறையில் வைப்பதாக திமுகவினர் வியந்து போயுள்ளனர்.. எந்நேரமும் ராஜ் பவன் மாளிகைக்குள் முடங்கிவிடாமல் மக்களையும், அன்பர்களையும் சந்தித்து வருவதால், தமிழிசையை நினைத்து, தமிழக மக்களே பூரித்து போயுள்ளனர்..!
-
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications