தலைமை செயலகமே பதறிடுச்சு.. இப்ப டிஜிபி ஆபீஸ்.. யூனிபார்முடன் ஏட்டு செய்த காரியம்.. விக்கித்த சென்னை
சென்னை: சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்ட போலீஸ்காரரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. என்ன நடந்தது சென்னையில்?
சென்னை ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டுவாக வேலை பார்த்து வருபவர் கோதண்டபாணி.. இவரது 8 வயது மகள் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்..

இதனால், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், மகளை சிகிச்சைக்காகவும் ஏட்டு சேர்த்துள்ளார்.. ஆனால், மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுவிட்டது.. இதனால், சிறுமியின் வலது கால் அழுக ஆரம்பித்துள்ளது.. ஒருகட்டத்தில் அதை அகற்ற வேண்டிய நிலைமையும் வந்துவிட்டது.
தலைமைச்செயலகம்: சிறுநீரக பிரச்சினைக்கு போனால், குழந்தைக்கு கால் போய்விட்டதே என்று கொந்தளித்து போனார் ஏட்டு. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகித்திடமும் கேள்வி எழுப்பினார்.. ஆனால், அவருக்கு எந்தவிதமான பதிலையும் நிர்வாகம் தரப்பில் சொல்லவில்லையாம்.. இப்படியே மாதங்களும் உருண்டு போயுள்ளது.
இதனால் மேலும் நொந்துபோன ஏட்டு கோதண்டபாணி, தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்தார். கடந்த ஏப்ரல் மாதம், சட்டசபையில் பட்ஜெட் நேரத்தில் இந்த தர்ணாவை கையில் எடுத்தார்..
தலைமைச்செயலகம் முன்பு, தன்னுடைய மகளுடன் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார். இதனால், சட்டமன்றமே பரபரப்பாகிவிட்டது.. சட்டமன்ற வாயிலில் ஒரு போலீஸ்காரர் தர்ணாவில் ஈடுபடுவதைக்கண்டு, அனைவரும் பதறிப்போனார்கள். உடனடியாக இதுகுறித்து குழு அமைத்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவோடு சரி, எந்த குழுவும் கடைசிவரை அமைக்கப்படவில்லையாம்.
மீண்டும் தர்ணா: ஏற்கனவே நொந்து போயிருந்த கோதண்டபாணி, இப்போது மேலும் விரக்திக்கு ஆளானார்.. இதையடுத்து, இன்று மதியம் மறுபடியும் தர்ணாவில் ஈடுபட்டார். தன்னுடைய மகளுடன் இன்று மதியம் டிஜிபி அலுவலகத்திற்கு வந்த அவர், நடுரோட்டிலேயே உட்கார்ந்து தர்ணா செய்தார். இதனால், மறுபடியும் பரபரப்பு அங்கு ஏற்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏட்டு கோதண்டபாணி, "இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 77-வது வருஷத்தை கொண்டாடிட்டு இருக்கோம். ஆனால் என் மகளுக்காக 2 வருடங்களாக நான் போராடிட்டு இருக்கேன்.. ஆனால், நீதி கிடைக்கவில்லை.. குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் சொன்னார். ஆனால், குழுவும் அமைக்கப்படவில்லை..
சான்றிதழ்: தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு 4 மாதங்களுக்கு பிறகு இப்போது அவருடைய மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குவதாக குழந்தைகள் நல ஆணையம் சொல்கிறது.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்தது குறித்து, எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை. அந்த விளக்கம்தான் தனக்கு வேண்டுமே தவிர மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் தேவையில்லை.
விசாரணை: என் குழந்தைக்கு ஊனமுற்றோர் சான்றிதழ் தருவதாகவும், பென்ஷன் தருவதாகவும் சொல்வதில் என்ன நியாயம்? குழந்தையை ஊனமாக்கிவிட்டு, ஊனமுற்றோர் சான்றிதழ் தருவதாக சொல்வது சரியா? இதுதான் இந்தியாவின் நிலைமையா?
என்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.. இல்லாவிட்டால், என்னையும், என் மகளையும் கருணை கொலை செய்துவிடுங்கள்.. அதுவரை போராட்டம் நடத்தி கொண்டேதான் இருப்பேன்" என்று கண்ணீருடன் ஆவேசமாக கூறினார்.












Click it and Unblock the Notifications