Anbumani: அன்புமணி நீக்கம்! கொதிக்கும் பாமகவினர்! ராமதாஸ் வீட்டிற்கு விரைந்த அதிவிரைவு படையினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக அவரது வீடு இருக்கும் தைலாபுரத்திற்கு அதிவிரைவு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அன்புமணியை பாமகவிலிருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்ட நிலையில் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியுள்ளார். இது தொடர்பாக மேலும் சில முக்கியத் தகவல்கள் இதோ:

ramadoss anbumani ramadoss pmk

மோதலின் பின்னணி

தலைவர் பதவிப் போட்டி: அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மீண்டும் தலைவர் பதவியை தானே எடுத்துக்கொண்டு, அன்புமணியை செயல் தலைவராக நியமிக்க முயன்றார். இதை அன்புமணி ஏற்கவில்லை.

பொதுக்குழுவின் பிளவு: இந்த விவகாரம் காரணமாக, இரு தரப்பும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டங்களை நடத்தின. இதில், அன்புமணியின் ஆதரவாளர்கள் பலர் நீக்கப்பட்டனர்.

முகுந்தன் நியமனம்: இந்த மோதலை மேலும் தீவிரப்படுத்தியது, ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைஞரணித் தலைவராக நியமித்த முடிவு. இந்த நியமனத்திற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.

நீக்கத்திற்கான காரணங்கள்

  • 16 குற்றச்சாட்டுகள்: அன்புமணியின் மீது கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டதாக 16 குற்றச்சாட்டுகளை ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன்வைத்தது.
  • பதிலளிக்காதது: இந்த குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்கவில்லை. அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ராமதாஸிடம் சீலிடப்பட்ட கவரில் நிர்வாகிகள் ஒரு கடிதத்தை கொடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து இரண்டு முறை கால அவகாசம் அளிக்கப்பட்டும் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என ராமதாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
  • "களை" நீக்கம்: ராமதாஸ், அன்புமணி குறித்து பேசும்போது, "அன்புமணி என்ற களை நீக்கப்பட்டுள்ளது" என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவர் தனிக்கட்சி தொடங்கலாம் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணியின் எதிர்வினை

  • 'நான் தான் தலைவர்': அன்புமணி, தான் இன்னும் பாமக தலைவர் என்ற பெயரில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இது கட்சியில் அதிகாரப் போட்டி இன்னும் தொடர்வதைக் காட்டுகிறது.
  • அவசர ஆலோசனைகள்: இந்த நீக்க அறிவிப்பிற்குப் பிறகு, அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
  • இந்த நீக்கம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவின் எதிர்காலத்திற்கு இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அன்புமணி கருத்து

இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அன்புமணி ராமதாஸிடம் கேட்ட போது, "எனக்கு முக்கியமான வேலைகள் நிறைய இருக்கிறது. உங்கள் கேள்விக்கு செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு பதிலளிப்பார்" என கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில் பாமகவிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டதற்கு நிர்வாகிகள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் வழக்கறிஞர் பாலு கூறுகையில், அன்புமணியை நீக்கி ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது. அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை. கட்சி நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் பொதுக்குழுவால் தேர்வான தலைவருக்கே உள்ளது. வரும் தேர்தலில் வேட்பாளர்களையும் தொகுதிகளையும் அன்புமணியே முடிவு செய்வார் என தெரிவித்திருந்தார்.

ஆதரவாளர்கள் கோபம்

அன்புமணியை நீக்கியதால் ராமதாஸ் மீது அவரது ஆதரவாளர்கள் கொதிப்புடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பதற்காக அதிவிரைவு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+