சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் நிர்வாகிகளின் ட்விட்டர்கள் முடக்கம்.. விசிக எதிர்ப்பு.. விக்ரமன் காட்டம்
சென்னை: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியின் 20க்கும் அதிகமான நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் ட்விட்டர் பக்க முடக்க செயலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். இவர் திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல் தனித்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் அவர் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே வேட்பாளர்களை களமிறக்கினார்.

மேலும் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டம், போராட்டம், ஆர்ப்பாட்டங்களை அவர் எடுத்து வருகிறார். அதோடு தமிழ் தேசியம் குறித்தும், மாநிலத்தில் நடக்கும் ஊழல், முறைகேடு பற்றியும் அவர் எடுத்துரைத்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று திடீரென்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் அதிரடியாக முடக்கம் செய்யப்பட்டன.
சீமானின் @SeemanOfficial என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில், ‛‛சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் பிற நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ், உள்பட 20க்கும் அதிக நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் துரை முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கிறது கருத்து சுதந்திரம் பேசும் கண்ணியவான்களே நாங்கள் சமூக வலைதளங்களில் பேசுவதை கூட உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்நிலையில் தான் சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டு இருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளரான விக்ரமன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‛‛நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் உள்ளிட்ட கட்சியின் முக்கிற பொறுப்பாளர்களின் ட்விட்டர் கணக்குகம் முடக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நமக்கென இருக்கும் மக்கள் ஊடகங்களிலும் கருத்துரிமையை பறிப்பது ஜனநாயக விரோத செயல். கடும் கண்டனங்கள்'' என விக்ரமன் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications